Cricket
பும்ராவுக்கு கடினம் தான்.. ஆனால் ஒரு முடிவை எடுக்கனும் – கிளென் மெக்ராத் கருத்து..!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் தனது வித்தியாசமான பவுலிங் ஆக்ஷன் மற்றும் அதிரடியான யார்க்கர் மூலம் எதிரணி வீரர்களை அச்சுறுத்தும் திறன் கொண்டிருக்கிறார். காயம் காரணமாக கடந்த ஓராண்டாக களமிறங்காமல் இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா ஐயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்குகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, களமிறங்குவதால், ஜஸ்பிரித் பும்ரா எப்படி பந்து வீசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அதிகரித்து இருக்கிறது. ஐயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் துவங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடர்களில் இந்திய அணி விளையாட இருக்கிறது.
அந்த வகையில், பலரையும் போன்றே ஜஸ்பிரித் பும்ராவின் வருகைக்கு கிளென் மெக்ராத் எதிர்பார்த்திருக்கிறார். ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு காயங்களை நினைவுகூர்ந்து, பும்ராவுக்கு தனது வருத்தங்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது..,
“இந்திய அணிக்கு அவர் அபாரமான வீரராக இருந்து வந்துள்ளார். அவரின் பவுலிங் புள்ளிகள், அவர் எடுத்திருக்கும் விக்கெட்கள், அவர் பந்துவீசும் விதம் உள்ளிட்டவைகளுக்கு நான் ரசிகன். அவரது பவுலிங் ஆக்ஷன், அவரது உடலை அதிக உலைச்சலில் தள்ளிவிடுகிறது. அவர் எப்போதும் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம் ஆகும். அவர் அப்படி செயல்பட்டால் இன்னும் சில ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியும்.”
“தற்போதைய சர்வதேச கிரிக்கெட் அட்டவனை மற்றும் ஐ.பி.எல். போன்ற தொடர்கள் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு காலம் எதுவும் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. அதுவும் பும்ரா போன்ற வீரர்களுக்கு இதற்கு வாய்ப்பே இருக்காது. பும்ரா போன்ற வீரர்கள் மீண்டும் பலத்தை பெறுவதற்கு இத்தகைய ஓய்வு காலம் அவசியம் தேவை. இதற்கு அவர் தான் தனக்கு தானே முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும்.”
“மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவது சிரமமான காரியம். இந்த விஷயத்தில் பும்ரா சற்று யோசனை செய்து செயல்பட வேண்டும். பும்ரா செய்வது மிகவும் கடினமான காரியம், அது அவரின் உடலை அதிகளவில் சோர்வடைய செய்கிறது. இதனால், அவர் தனது கிரிக்கெட் காலம் முழுக்க அதிக நேரம் ஓய்வில் இருப்பது அவசியம் ஆகும். கிரிக்கெட்டில் மீதமுள்ள காலத்தில் அவர் நிறைய செய்ய வேண்டி இருப்பதாக நான் நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.