Cricket
யுஸ்வேந்திர சாஹலுக்கு எதுக்கு ஒரு ஓவர் கொடுக்கல? செம கடுப்பான முன்னாள் வீரர்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அருமையாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் அவருடைய பந்துவீச்சு இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்தது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தாலும் அவருக்கு மூன்று ஓவர்கள் மட்டுமே பந்து வீச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒருவேளை அவருக்கு 4 ஓவர் பந்து வீச வாய்ப்பு கிடைத்திருந்தது என்றால் கண்டிப்பாக அவர் இன்னுமே விக்கெட்டுகளை எடுத்திருப்பார். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “யுஸ்வேந்திர சாஹல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
ஆனால் அவருக்கு மூன்று ஓவர்கள் மட்டும்தான் பந்து வீச வாய்ப்பு வழங்கப்பட்டது அதற்கு காரணம் என்னவென்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை. அவர் அந்த போட்டியில் குறைவான ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவருடைய பந்துவீச்சு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அவருக்கு மீதமுள்ள ஒரு ஓவர் கொடுக்காதது ஏன்? எனக்குஆச்சரியம் என்னவென்றால், பவர்பிளேயில் தொடக்க ஆட்டக்காரர்களான பிராண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸை வெளியேற்றுவதன் மூலம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய சாஹல், 13வது ஓவர் வரை மற்றொரு ஓவரை வீசவில்லை.
அவரை பந்து வீச விட்டிருந்தால் இன்னும் வெஸ்ட் இண்டீஸ் அணி ரன்கள் அடிக்காத அளவிற்கு கட்டுப்படுத்தி இருக்கலாம். நிக்கோலஸ் பூரனை அவர் ஆட்டமிழக்கச் செய்திருக்கலாம், ஏனெனில் அவர் இடது கை பேட்டர்களுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசினார். எனவே இதைப் போல வரும் போட்டிகளில் அவரை பந்த வீசுவிடாமல் தடுக்க வேண்டாம் என ஆகாஷ் சோப்ரா பேசிஉள்ளர்