Connect with us

Cricket

ஏமாற்றமாகத் தான் இருக்கு.. ஆனாலும் வாழ்த்துக்கள்.. ஆர்.சி.பி. முன்னாள் பயிற்சியாளர் உருக்கம்..!

Published

on

Mike-Hessen-Featured-Img

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக ஆன்டி ஃபிளவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியானது. ஆர்.சி.பி. அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் ஹெசன் மற்றும் தலைமை பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் செயல்பட்டு வந்தனர். இந்த இருவரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.

Mike-Hessen-Sanjay-bangar

Mike-Hessen-Sanjay-bangar

எனினும், ஆர்.சி.பி. நிர்வாகம் இருவரின் பணிக்காலத்தை நீட்டிக்காமல், புதிய பயிற்சியாளரை நியமனம் செய்து இருக்கிறது. அதன் படி புதிய பயிற்சியாளர் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து மைக் ஹெசன் தனது இன்ஸ்டாகிராமில் ஆர்.சி.பி. அணியில் இருந்து விடைபெறுவது குறித்த பதிவை பகிர்ந்து இருக்கிறார். இது குறித்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது..,

“கடந்த நான்கு சீசன்களில் மூன்று முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய போதிலும், எங்களால் கோப்பையை வென்றிட முடியவில்லை. அனைத்து வீரர்கள், ஒத்துழைப்பு பணியாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரின் ஆசை, ஆர்.சி.பி. கோப்பை வெல்வது தான். ஆர்.சி.பி.யை விட்டு விலகுவது ஏமாற்றம் அளித்த போதிலும், களத்திலும், களத்தின் வெளியிலும் அணியிருடன் பல நினைவுகளை பெற்று இருக்கிறேன்.”

Andy-Flower-RCB-Coach

Andy-Flower-RCB-Coach

“எனக்கு வாய்ப்பளித்த அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, ஆர்.சி.பி.-க்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய பயிற்சியாளர் குழுவுக்கும் வாழ்த்துக்கள். இறுதியில் ஆர்.சி.பி. ரசிகர்கள், நீங்கள் தொடர்ச்சியாக ஆதரவளித்து வந்துள்ளீர்கள். அணி மீது அன்பு கொண்டிருக்கின்றீர்கள். மேலும் வீட்டில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றீர்கள், இதற்காக உங்களுக்கு நன்றி,” என்று தெரிவித்தார்.

 

தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் அணி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் ஆன்டி ஃபிளவர் முன்னதாக கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். இதோடு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். இதன் மூலம் லக்னோ அணி தொடர்ச்சியாக இரண்டு சீசன்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

google news