Connect with us

Cricket

உலக கோப்பையில் தொடர் பஞ்சாயத்து.. என்னதான் நடக்குதோ-பாகிஸ்தான் போட்டியின் தேதி மாற்றம்?

Published

on

Pakistan-Featured-Img

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நவம்பர் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியின் தேதியை மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) வங்காள கிரிக்கெட் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 12 ஆம் தேதி கலி பூஜை நடைபெற இருப்பதால், உள்ளூர் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்து இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.

Pakistan-team

Pakistan-team

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையமான பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.சி.சி. இந்த தேதி மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் போட்டியின் தேதி மூன்றாவது முறையாக மாற்றப்படும். முன்னதாக அக்டோபர் 15 ஆம் தேதி ஆமதாபாத்தில் நடைபெற இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி அக்டோபர் 14 ஆம் தேதிக்கும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையே ஐதராபாத்தில் அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற இருந்த போட்டி அக்டோபர் 10 ஆம் தேதியும் நடைபெற இருக்கின்றன.

அக்டோபர் 15 ஆம் தேதி நவராத்திரி பண்டிகை காரணமாக பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆமதாபாத் காவல் துறை பி.சி.சி.ஐ.-இடம் தெரிவித்து இருந்ததால், தேதி மாற்றம் செய்யப்பட்டது. ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. ஜூன் 27 ஆம் தேதி நடைபெற்ற பிரமாண்ட நிகழ்வில் கிரிக்கெட் உலக கோப்பைக்கான அட்டவனையை வெளியிட்டது.

Bengal-Cricket-Academy

Bengal-Cricket-Academy

தற்போது அட்டவனையில் அதிக மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதால், திருத்தப்பட்ட புதிய அட்டவனை இதுவரை வெளியிடப்படவில்லை. மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது மிகப்பெரிய பண்டிகையாக கலி பூஜை உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொள்வார்கள். இதன் காரணமாக அதிகளவிலான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

“கொல்கத்தா காவல் துறை போட்டி தேதியன்று பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. நாங்கள் ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ.-யிடம் தேதியை மாற்ற கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஒருவேளை இது நடக்காத பட்சத்தில் இதுபற்றி முதல்வரிடம் தகவல் தெரிவிப்போம்,” என்ற வங்காள கிரிக்கெட் ஆணைய மூத்த அலுவல் பொறுப்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

 

 

 

google news