Cricket
உலக கோப்பை 2023.. பாகிஸ்தான் அணியுடன் இந்தியா வரும் அந்த நபர்.. வெளியான புது தகவல்..!
ஐ.சி.சி. உலக கோப்பை 2023 தொடர் விரைவில் துவங்க இருக்கும் நிலையில், பாகிஸ்கான் கிரிக்கெட் வாரியம் தனது அணியுடன் உளவியலாளரை அனுப்பி வைக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இதுபற்றிய இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சாகா அஷ்ரஃப் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இருவரின் சந்திப்பில் தான் இது பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் எல்.பி.எல். தொடரில் கொலம்போ ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக பாபர் அசாம் விளையாடி வருகிறார்.
“உளவியலாளர் அஅணிக்கு உதவியாக இருப்பார் என்று சாகா அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார். குறிப்பாக மோசமான ஆட்டங்களின் போது உளவியலாளர்கள் அணி வீரர்களின் மன நிலையைசீராக லைத்துக் கொள்ள பெரிதும் உதவியாக இருப்பார்கள்.”
“பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்தபோது, பிரபல உளவியலாளரான மக்பூல் பாப்ரியை அணி வீரர்களுடன் பணியாற்ற சாகா அஷ்ரஃப் சொன்னார். மேலும் 2012, 13 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியுடன் அவர் இந்தியாவுக்கு சென்று இருந்தார்,” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.
2016 ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் அணி முதல் முறையாக இந்தியாவுக்கு வர இருப்பதால் உளவியலாளர் அணியுடன் வருவது அதிக பலன் அளிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 2011 உலக கோப்பை தொடருக்காக இந்தியா கிளம்புவதற்கு முன் விளையாட்டு துறை உளவியலாளருடன் பாகிஸ்தான் வீரர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2023 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவின் பல்வேரு பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூரு, சென்னை மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்களில் விளையாட இருக்கிறது.