Cricket
பும்ரா விளையாடுறது இருக்கட்டும்.. ஆனால்.. இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர்..!
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுன்டர் மதன் லால் ஐயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவது சிறப்பான காரியம் தான். ஆனால் ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் பவுலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியிருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்.
ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி துவங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதையொட்டி ஐயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு தலைமை பொறுப்பேற்று களமிறங்கி, அதன் பிறகு நடைபெறும் உலக கோப்பை தொடரில் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. கடந்த ஜூலை 31 ஆம் தேதி அறிவித்தது. இதுபற்றி மதன் லால் கூறியதாவது..,
“அவர் ஐயர்லாந்துக்கு செல்வது நல்ல விஷயம் தான். அவர் போட்டிகளில் விளையாடு, அவர் தனது பிட்னசில் எங்கு இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும். அவர் போட்டிகளில் விளையாடி, சீரான நிலையில் இருப்பது அவசியம் ஆகும். அவர் உலக கோப்பையில் விளையாடுவது முக்கியமான விஷயம் ஆகும். தேவையற்ற ரிஸ்க் எடுப்பதை அவர் முழுமையாக தவிர்க்க வேண்டும்.”
“பும்ரா நமக்கு சொத்து என்ற போதிலும், ஒரு பவுலர் மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது. நமது பவுலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை எனில், நமக்கான சூழல் கடினமாகி விடும். மிடில் ஆர்டர் பேட்டர்கள் தொடர்ந்து விளையாடி வருவதால், அவர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.”
“நீங்கள் சரியாக செயல்படவில்லை எனில், இத்தனை கடின உழைப்பும் வீணாகிவிடும். சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை வீரர்களிடமே உள்ளது. இதுவை மிடில் ஆர்டரை உறுதியாகவும், நம்பிக்கை கொண்டதாகவும் மாற்றும். நமது மிடில் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டால் தான், இந்தியா உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு உருவாகும்.”
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த மதன் லால், “அணி நிச்சயம் மீண்டுவரும். இந்த சீரிசில் ஐந்து போட்டிகள் உள்ளன. வெஸ்ட் இன்டீஸ் அணி டி20 போட்டிகளில் சிறப்பான அணியாக உள்ளது. அவர்கள் இந்திய அணிக்கு கடினமான சூழலை உருவாக்க முடியும். இந்திய அணி இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.