Connect with us

Cricket

அதிரடி ஆட்டம் இருக்கட்டும்.. முதல்ல இத கவனிங்க.. நிக்கோலஸ் பூரானுக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி.!

Published

on

Nicholas-Pooran-Featured-Img

வெஸ்ட் இன்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர், பேட்டர் நிக்கோலஸ் பூரானுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அம்பயர்கள் மீது விமர்சனம் தெரிவித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

சர்வதேச போட்டியில் நடைபெறும் சம்பவத்திற்கு பொதுப்படையில் விமர்சனம் தெரிவிக்கக்கூடாது என்ற ஐ.சி.சி. விதியை நிக்கோலஸ் பூரான் மீறி இருக்கிறார். இதனை அவர் ஒப்புக்கொண்டு இருக்கிறார். போட்டியின் போது நடத்தை விதிகளை மீறியதாக பூரானிடம் போட்டியின் நடுவர் ரிச்சீ ரிச்சர்ட்சன் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

Nicholas-Pooran

Nicholas-Pooran

அபராதம் மட்டுமின்றி நிக்கோலஸ் பூரான் மீது 24 மாதங்களுக்கு மதிப்பிழப்பு புள்ளிகளும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணி பேட்டிங் செய்த போது, நான்காவது ஓவரில் எல்.பி.டபிள்யூ. முறையிலான விக்கெட்டிற்கு வீரர் ரிவ்யூ பயன்படுத்த வேண்டிய சூழல் உருவானதற்கு பூரான் விமர்சனம் தெரிவித்தார்.

களத்தில் நின்ற அம்பயர்கள் லெஸ்லி ரெய்ஃபர் மற்றும் நிகெல் டுகுயிட், மூன்றாவது அம்பயர் கிரெகரி பிரத்வெயிட், நான்காவது அம்பயர் பட்ரிக் கஸ்டர்ட் ஆகியோர் தண்டனையை உறுதிப்படுத்தினர். நடத்தை விதிகள் மீறலுக்கான லெவல் 1 குறைந்தபட்ச அபராதம், அதிகபட்சம் வீரரின் போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம், ஒன்று அல்லது இரண்டு மதிப்பிழப்பு புள்ளிகள் வழங்கப்படுகிறது.

Nicholas-Pooran-1

Nicholas-Pooran-1

இரண்டாவது டி20 போட்டியில் 153 ரன்களை துரத்திய நிக்கோலஸ் பூரான் 40 பந்துகளில் 67 ரன்களை விளாசினார். இதனால் வெஸ்ட் இன்டீஸ் வெற்றி இலக்கை 18.5 ஓவர்களிலேயெ எட்டியது. இதன் மூலம் வெஸ்ட் இன்டீஸ் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு வெற்றிகளுடன் முன்னணியில் உள்ளது.

இந்திய அணி சார்பில் சிறப்பாக ஆடிய திலக் வர்மா அரைசதம் அடித்தார். சர்வதேச டி20 போட்டிகளில் இது திலக் வர்மாவின் முதல் அரைசதம் ஆகும். இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி இன்று (ஆகஸ்ட் 8) இரவு துவங்குகிறது. போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்க இருக்கிறது.

google news