Cricket
தோல்விக்கு காரணம் இதுதான்! வருத்தத்துடன் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!
வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது எந்த t20 கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஒரு போட்டியில் இந்திய அணியும் வென்று இந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் உள்ளது.
நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டி செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் அடித்திருந்தது அடுத்ததாக 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.5 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் எடுத்து ஏலு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவி உள்ள நிலையில் இதுகுறித்து போட்டி முடிந்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மேன் பவல் தோல்விக்கான காரணத்தை பற்றி பேசினார். இது தொடர்பாக பேசிய அவர் ‘ நாங்கள் இன்னும் ஒரு 10,15 ரன்கள் அதிகமாக அடித்து இருந்தால் இந்த போட்டி சற்று சவாலானதாக இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.
தொடக்கத்தில் நாங்கள் அருமையாக தான் விளையாடினோம் அப்பவே என்னுடைய மனதில் ஒரு நல்ல டார்கெட் இந்தியனுக்கு எதிராக வைக்கலாம் என தோன்றியது ஆனால் நடுவில் எங்களுடைய அணி வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டை விட்டதால் சரியாக ரல்களை அடிக்க முடியவில்லை. பூரணக்கு பதிலாக மூன்றாவதா இடத்தில் சார்லஸை களம் இறக்கலாம் என நினைத்தோம். ஆனால் அவரை களம் இறக்க முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை நாங்கள் பேட்டரியில் தான் தவறு செய்துள்ளோம் என நினைக்கிறேன்.
இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளது அந்த இரண்டு போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெறுவதற்கு எவ்வளவு அருமையாக விளையாட வேண்டுமா அதை போல் அருமையாக விளையாடுவோம்’ என ரோவ்மேன் பவல் தெரிவித்துள்ளார்.