Cricket
அடிக்கணும்னு நினைச்சா அடிச்சுக்கோங்க! பூரானுக்கு சவால் விட்ட ஹர்திக் பாண்டியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டி செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் அடித்திருந்தது அடுத்ததாக 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.5 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிக்கலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 60 ரன்களுக்கு மேல் குவித்து இருந்தார். எனவே, மூன்றாவது போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அவர் தான் சவாலாக இருப்பார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், பூரன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு வெற்றிக்குறித்தும் நிக்கலஸ் பூரன் குறித்தும் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக்பாண்டியா பேசினார். இது குறித்து பேசிய அவர் ” நாங்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பே எங்களுடைய அணி வீரர்களிடம் கலந்துரையாடினோம். அப்போது அவர்களே சொன்னார்கள் வரும் 3 போட்டி மிகவும் விறு விறுப்பாக இருக்கும் என்று.
அவர்கள் சொன்னது போல வரும் போட்டிகள் அப்படி தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் வரும் போட்டிகளில் கண்டிப்பாக வெற்றிபெற்ற ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரான் விரைவாக பேட்டிங் செய்ய வந்தது நன்றாக இருந்தது. அவருக்கு எதிராக ஸ்பின்னர்களை நாங்கள் பயன்படுத்தி விட்டோம்.
நிக்கலஸ் பூரன் அடிக்கவேண்டும் என்றால் என்னுடைய பந்துவீச்சை அடிக்கட்டும். அவர் இறங்கி அடிக்கவேண்டும் அப்போதுதான் அவருடைய விக்கெட்டை எடுக்கமுடியும் என்பதற்காக நாங்கள் திட்டத்தை யோசித்து வைத்திருந்தோம். அடுத்ததாக வரும் போட்டிகளில் அவர் என்னுடைய பந்துகளை அதிரடியாக எதிர்கொள்ளவர் என நான் நினைகிறேன். எங்களுடைய அணியில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா இருவரும் அருமையாக விளையாடினார்கள்” எனவும் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.