Connect with us

tech news

கிளாசிக் லுக்கில் புது மார்ஷல் TWS – விலையை கேட்டால் தலையே சுற்றும்..

Published

on

மார்ஷல் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய TWS இயர்பட்ஸ் – மார்ஷல் மைனர் IV மாடலை அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் அளவில் சிறியதாகவும், ஆடியோ தரத்தில் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.

இந்த இயர்பட்ஸ் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IPX4 தர வாட்டர் ரெஸிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

மார்ஷல் மைனர் IV மாடல் 42% மறு சுழற்சி செய்யப்பட பிளாஸ்டிக், 90% CD மற்றும் இதர நுகர்வோர் பயன்படுத்திய பழைய பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதில் உள்ள பேட்டரியை கொண்டு 7 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும். மேலும் சார்ஜிங் கேஸ் கொண்டு 30 மணி நேர பிளேபேக் பெறலாம். இந்த இயர்பட்ஸ் 12mm அளவில் டைனமிக் டிரைவர்களை கொண்டு இயங்குகிறது.

புதிய மைனர் IV இயர்பட்ஸ் அழைப்புகள் மற்றும் இசையை கேட்கும் போது சீரான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதில் ப்ளூடூத் LE ஆடியோ ரெடி வசதி உள்ளது. இது சிறப்பான ஆடியோ மற்றும் அதிவேக கனெக்டிவிட்டியை உறுதி செய்கிறது.

இதன் இயர்பட்களில் டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. இதன் மூலம் இயர்பட்-ஐ சுலபமாக கட்டுப்படுத்த முடியும். இந்த இயர்பட் உடன் பயனர்கள் மார்ஷல் ஆப் கொண்டு தங்களுக்கு ஏற்ற செட்டிங் வைத்து சிறப்பான ஆடியோவை கேட்கலாம்.

மார்ஷல் மைனர் IV மாடலில் USB Type C பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை கொண்டு 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இயர்பட்-ஐ மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் மார்ஷல் மைனர் IV மாடலின் விலை ரூ. 11,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜூன் 15 ஆம் தேதி துவங்குகிறது.

 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *