Connect with us

latest news

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை!.. பொதுமக்கள் மகிழ்ச்சி!…

Published

on

gold

பொதுமக்கள் எப்போதும் விரும்பி வாங்கப்படும் ஆபரணமாக தங்கம் இருக்கிறது. தங்க நகைகளை அணிவதை பெருமையாகவும், தங்க நகைகளை வாங்குவதை மகிழ்ச்சியாகவும் மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான், தங்கத்தின் விலை ஒரு சவரன் 50 ஆயிரத்தை தாண்டிய பின்னரும் அதை வாங்க மக்கள் ஆசைப்படுகிறார்கள்.

கடந்த சில வருடங்களில்தான் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டிருக்கிறது. 45 ஆயிரம் இருந்தது இப்போது 55 ஆயிரத்திற்கு வந்துவிட்டது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டேதான் போகும் என்பதால் அதை சொத்து போல வாங்கி வைப்பவர்களும் பலரும் உள்ளனர். கடந்த சில மாதங்களாவே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை ஜூன் மாதம் துவக்கம் முதலே ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று(13.06.2024) சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று (14.06.2024) மீண்டும் விலை குறைந்திருக்கிறது. அதன்படி 14ம் தேதியான இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 6,650 என விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,200க்கும் விற்பனை ஆகி வருகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5447 ஆக விலைக்கும் ஒரு சவரனுக்கு ரூ.72 குறைந்து 43,576 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் போலவே வெள்ளியும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் 95 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

google news