latest news
நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தில் 4 பேர் மரணம்! – நேபாளத்தில் அதிர்ச்சி…
இயற்கை சீற்றங்களுக்கு மனிதர்கள் பலியாவது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. மழை, வெள்ளம், மின்னல், இடி, நிலச்சரிவு, நிலநடுக்கும், சுனாமி போன்ற பல காரணங்களால் மனிதர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகிறார்கள். இயற்கை சீற்றம் எங்கே எந்த நேரத்தில் ஏற்படும் என்பதை இன்னமும் மனிதன் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மூலம் அறியமுடியவிலை.
நிலச்சரிவு என்பது மழையின் காரணமாக நிகழ்கிறது. குறிப்பாக அதிக மழை மற்றும் வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்படுவதுண்டு. சில சமயம் இதற்கு மனித உயிர்களும் பலியாகி விடும். இந்நிலையில்தான், நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 10ம் தேதி முதலே நேபாளத்தில் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கிழக்கு நேபாளத்தில் மிகவும் அதிகமான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தப்லேஜங் மாவட்டம் பக்டாங்கலங் ஊரக நகராட்சி பகுதியில் நேற்று நாள் முழுவதும் இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது.
இதனால், அந்த பகுதியில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த இடுபாடுகளில் 2 வீடுகள் மண்ணில் புதைந்து போனது. இதில், ஒரு வீட்டில் தங்கியிருந்த ஒரு ஆண், அவரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர். அவர்கள் உடல் இன்று மீட்கப்பட்டிருக்கிறது. அவர்களின் 50 ஆடுகள் மற்றும் ஏராளமான கோழிகளும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துவிட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.