latest news
ஆதார் கார்டுகளில் தகவல்களை இலவசமாக புதுப்பிக்கலாம்!.. மிஸ் பண்ணாதீங்க மக்களே!..
ஆதார் கார்டு கட்டாயம் என்பதை மத்திய அரசு பல வருடங்களுக்கு முன்பே கொண்டுவந்துவிட்டது. அதேபோல், அரசின் பல்வேறு சேவைகளை பெறவும் ஆதார் கார்டுகள் அவசியமாக்கப்பட்டது. அதோடு, வங்கி கணக்கு உட்பட எல்லாவற்றிலும் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டது.
ஒருபக்கம், பொதுமக்கள் தங்களின் ஆதார் விபரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்தது. ஏனெனில் பலரின் முகவரிகள், தொலைப்பேசி எண்கள் மாறியிருந்தது.
எனவே, அருகில் உள்ள இலவச சேவை மையத்தை அணுகி பொதுமக்கள் ஆதார் எண்ணை புதுப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், பொதுமக்கள் தாங்களாகவே ஆன்லைனில் மாற்றங்களை செய்து கொள்ள கட்டணம் கிடையாது. சேவை மையம் சென்றால் 50லிருந்து 100 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த பணி மந்தமாக நடந்ததால் தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே 2023ம் வருடம் டிசம்பர் 23ம் தேதி மற்றும் 2024 மார்ச் மாதம் 13ம் தேதி என இரண்டு முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது செப்டம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே, செப்டம்பர் 14ம் தேதி வரை கட்டணம் இல்லாமல் ஆதாரில் திருத்தங்களை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.