latest news
கோபம் காட்டிய அமித்ஷா!.. தமிழிசையை சந்தித்த அண்ணாமலை!.. அரசியல் பரபர!…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை இப்போதைய பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசிய விவகாரம் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மீது அந்த கட்சியிலேயே பலருக்கும் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக, முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன், எஸ்.வி.சேகர் போன்றோருக்கு அண்ணாமலையின் நடவடிக்கை பிடிக்கவில்லை. ஆனாலும், கட்சி தலைமைக்காக அடக்கி வாசித்து வருகின்றனர். இதில், எஸ்.வி.சேகர் மட்டும் அண்ணாமலையை விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில்தான், நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து, பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதற்கு காரணம் அண்ணாமலையின் செயல்பாடுகள்தான் காரணம் என தமிழிசை மறைமுகமாக செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனால் கோபமடைந்த அண்ணாமலையில் ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் தமிழிசையை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த தமிழிசை அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என பொங்கினார். அதன்பின்னர் ஹைதராபத்தில் சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழா மேடையில் தமிழிசையை மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டித்து பேசிய வீடியோ வைரலானது.
ஆனால், அவர் என்னை திட்டவில்லை. ஆலோசனை வழங்கினார் ஒரு உருட்டினார் தமிழிசை. இந்நிலையில், இன்று தமிழிசை சவுந்தர்ராஜனை அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். எனவே, இருவருக்குமான மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.