Connect with us

latest news

தமிழிசையை அமித்ஷா கண்டிக்கவில்லை!.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்…

Published

on

tamilisai

தமிழகத்தில் இப்போது பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இவர் கட்சியில் இணைக்கப்பட்டு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இவருக்கு முன் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு ஆளுநர் பதவி கொடுத்து ஆந்திராவுக்கு அனுப்பினார்கள்.

தமிழக பாஜகவில் அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து அக்கட்சியை சேர்ந்த பலருக்குமே அதிருப்தி இருக்கிறது. நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் போட்டியிட்ட எல்லா தொகுதியிலும் தோல்வி அடைந்தது. தேர்தலுக்கு முன் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அண்ணாமலை அதிமுக தலைவர்கள் பற்றி தவறாக பேசியதே அதற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது.

ஆளுநர் பதவியிலிருந்து விலகிய தமிழிசை சவுந்தர்ராஜன் மீண்டும் தமிழக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் தோல்விக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை அண்ணாமலை மீதான தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதனால், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் டிவிட்டரில் தமிழிசையை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ’ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என காட்டமாக பேட்டிக் கொடுத்தார்.

annamalai

அதன் தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் நடந்த சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தர்ராஜனை அமித்ஷா கண்டித்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கு முற்றுப்புள்ளை வைக்க நினைத்த பாஜக தலைமை தமிழிசையும், அண்ணாமலையும் சந்தித்து பேச ஏற்பாடு செய்தது.

இந்நிலையில், தமிழிசையை அமித்ஷா கண்டிக்கவில்லை. கடந்த காலத்தை போலவே தமிழிசைக்கு பாஜகவில் உயரமான ஒரு இடம் உண்டு’ என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

google news