tech news
சுழலும் டயல் கொண்ட CMF போன் 1 – வெளியான சூப்பர் டீசர்
நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்ட் சி.எம்.எஃப். தனது முதல் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் சி.எம்.எஃப். போன் 1 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. சி.எம்.எஃப். போன் 1 மாடலுடன் புதிய இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
சமீபத்தில் சி.எம்.எஃப். போன் 1 டீசரை அந்நிறுவனம் வெளியிட்டது. இதில் புதிய ஸ்மார்ட்போன் சுழலும் டயல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் புது ஸ்மார்ட்போன் அசத்தலான டிசைன் கொண்டிருக்கும் என்று சி.எம்.எஃப். தெரிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் சுழலும் டயல்களை கொண்டு மீடியா பிளேபேக் மற்றும் வால்யூம் அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்று தெரிகிறது. புது ஸ்மார்ட்போன் மேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் 6.71 இன்ச் Full HD+ OLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
மேலும் அதிகபட்சமாக 8GB ரேம், 256GB மெமரி, 5000mAh பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தகவல். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த நத்திங் ஓ.எஸ். கொண்டிருக்கும்.
விலையை பொருத்தவரை சி.எம்.எஃப். போன் 1 மாடலின் பேஸ் வேரியண்ட் 6GB ரேம், 128GB மெமரி ரூ. 19,999-க்கு கிடைக்கும் என்று தெரிகிறது. எனினும், சலுகைகளுடன் இதன் விலை ரூ. 17,000 முதல் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.