Connect with us

latest news

பிரதமர் மோடியின் சென்னை பயணம் தள்ளி வைப்பு!.. காரணம் இதுதான்!…

Published

on

modi

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் சந்திரபாபு நாயுடு மற்றும் பிகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது பாஜக.

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்து பல வருடங்களாக அந்த கட்சி முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் இரு பெரும் அரசியல் ஆளுமைகளாக இருந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பின் தமிழகத்தில் அரசியல் ஆடுகளத்தை துவங்கியது பாஜக. தமிழர்களின் அபிமானத்தை பெற பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு பின் வழக்கம்போல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி வெளிநாட்டு பயணமாக ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி நாட்டுக்கு சென்று வந்தார். அடுத்து அவர் சென்னை வருவதற்கான பயண திட்டங்கள் நடந்தது. வருகிற 20ம் தேதி அவர் சென்னை வருவதாக செய்திகள் வெளியானது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை – நாகர்கோவில் வரை வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைக்க கொடியசைத்து தொடங்கி வைக்கவே அவர் சென்னை வருவதாக சொல்லப்பட்டிருந்தது. மேலும், பேசின் பாலம் யார்டில் உள்ள பனிமனைக்கு அடிக்கல், இரட்டைப்பாதை திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தால் போன்ற ரயில்வே நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், மோடியின் சென்னை பயணம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எப்போது வருகிறார் என்கிற தேதி அறிவிக்கப்படும் எனவும், நிர்வாக காரணங்களாலேயே அவரின் சென்னை பயணம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

google news