Connect with us

latest news

இனிமேல் திருப்பதிக்கு சுலபமா போகலாம்!.. பக்தர்களுக்கு தமிழ்நாடு செய்த ஏற்பாடு!…

Published

on

tirupathi

தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 பேர் வரை திருப்பதிக்கு சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்ந்திரன் கூறியுள்ளார்.

தமிழகத்திலிருந்து ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலுக்கு செல்பவர்கள் பலர். ஆனால், அதேநேரம், அங்கு கூட்டம் எப்போதும் அதிகமாக இருப்பதாலும், இலவச தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் நின்று சில சமயம் 24 மணி நேரம் கூட ஆவதால் பலரும் அவதிப்படுவதுண்டு. அதை நினைத்தே பலரும் திருப்பதி கோவிலுக்கு செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.

அதேநேரம், தமிழக சுற்றுலா கழகம் பக்தர்களை திருப்பதிக்கு அழைத்து செல்வதை ஒரு திட்டமாகவே வைத்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரே நாளில் பக்தர்கள் திருப்பதிக்கு சென்றுவிட்டு வர முடியும். சென்னை வாலாஜா சாலையிலிருந்து தினமும் அதிகாலை 4.30 மணிக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள். ஒவ்வொரு பேருந்திலும் ஒரு வழிகாட்டியும் இருப்பார். அவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயணத்திற்கான விளக்கங்களை சொல்வார்.

பயணிகளுக்கு காலை உணவு திருத்தணியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் உணவு வழங்கப்படும். தேவஸ்தானம் வழங்கும் சிறப்பு அனுமதி மூலம் விரைவில் தரிசனம் செய்வதோடு, பயணிகள் அனைவருக்கும் தலா ஒரு திருப்பதி லட்டும் வழங்கப்படும். மதிய உணவுக்கு பின் திருச்சானூரில் உள்ள பத்மாவதி அம்மானை தரிசனம் செய்துவிட்டு இரவு உணவுக்கு பின் பேருந்து சென்னை திரும்பும்.

இந்த பயணத்தை மேற்கொள்ள www.ttdconline.com இணையதள பக்கத்திலும், சென்னை வாலாஜா பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் அலுவலகத்திலும் முன்பதிவு செய்யலாம்.

google news