latest news
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜயின் கட்சி போட்டியிடுகிறதா?!.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கை…
டந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சமீபத்தில் மரணமடைந்தார். எனவே, இந்த தேர்தலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுக்கிறார்.
மேலும், நம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் போட்டியிடுவார்கள் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துவிட்டார். தேர்தல் முறையாக நடக்காது என்பதால் அதிமுக போட்டியிடவில்லை எனவும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.
திமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் நாளை அந்த தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்யவிருக்கிறார்கள். இந்நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் பரவியது. இந்நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில், கட்சி தலைவர் விஜய் ஏற்கனவே சொன்னது போல 2026 சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு. அதற்கு இடையில் நடக்கும் எந்த தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது. குறிப்பாக விக்கிரவாண்டி தொகுதியி நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது’ என அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.