Connect with us

latest news

கார் ஒட்ட பயிற்சி எடுத்த இளம்பெண் 300 அடி பள்ளத்தில் விழுந்து பலி!.. அதிர்ச்சி வீடியோ..

Published

on

car

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் பகுதியில் வசித்து வருபவர் சூரஜ் சஞ்சவ். இவரின் தோழில் ஸ்வேதா தீபக். இவர்கள் இரண்டு பேரும் நேற்று மதியம் சுலிபஞ்சன் மலை பகுதிக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் பொழுதை கழித்த பின், தனக்கு கார் ஓட்ட சொல்லி கொடுக்குமாறு சூரஜிடம் ஸ்வேதா கேட்டிருக்கிறார்.

சூரஜும் அவருக்கு கார் ஓட்ட சொல்லி கொடுத்திருக்கிறார். அதன்பின் நான் தனியாக ஓட்டுகிறேன் என ஸ்வேதா கூறியுள்ளார். எனவே, காரில் இருந்து இறங்கிய சூரஜ் ஸ்வேதா கார் ஓட்டுவதை செல்போனில் வீடியோ எடுக்க துவங்கினார். ஓரளவுக்கு ஓட்டிய ஸ்வேதா. ரிவஸ் கீரில் பயிற்சி செய்ய நினைத்தார்.

எனவே, மெதுவாக ரிவர்ஸ் கியரில் ஓட்ட துவங்கினார். காரும் பின்னால் போனது. அப்போது ஸ்வேதா கிளட்சி மிதித்து வண்டியை நகர்த்துவதற்கு பதில் ஆக்சிலேட்டரை மிதித்தார். இதனால், வண்டி வேகமான பின்னால் சென்று 300 அடி பள்ளத்தில் கீழே விழுந்தது. இதில், ஸ்வேதா மரணமடைந்தார். காரும் நொருங்கிபோனது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

பின்னால் 300 அடி பள்ளம் இருக்கும் நிலையில், ஸ்வேதா அங்கு கார் ஓட்ட பயிற்சி எடுத்ததே தவறு. அதுவும் ரிவர்ஸ் கியரில் காரை ஓட்ட முயற்சி செய்தது பெரும் தவறு என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

https://x.com/SparkMedia_TN/status/1802946551737651246

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

குடிச்சிட்டு வந்து அலும்பா பண்ற… மனைவி செய்த காரியத்தால் பதறிய கணவன்!

Published

on

By

மனைவி தனது கை, கால்களைக் கட்டிவிட்டு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக தெலங்கானாவில் கணவர் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்த சம்பவம் நடந்திருக்கிறது.

தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத்தை அடுத்த மச்சிப்பா தண்டா பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதையறிந்து மகேஷின் குடும்பத்தினரும் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அவரிடம் அறிவுறுத்தவும் செய்திருக்கிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்குப் போன மகேஷ் மனைவியை அடிக்கத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவரின் மனைவி மகேஷை வீட்டில் கட்டி வைத்திருக்கிறார். கை, கால்களை பிணைத்து வைத்ததுடன், அடுப்பில் எரிந்துகொண்டிருந்த கட்டை ஒன்றை எடுத்து வந்து உடலின் பல இடங்களிலும் சூடு வைத்ததாக சொல்லப்படுகிறது.

இதில், காயமடைந்த மகேஷூக்கு அவரின் மனைவியே மருந்தும் போட்டு பராமரித்து வந்திருக்கிறார். இரண்டு நாட்களில் காயம் சிறிது ஆறிய நிலையில் நிஸாமாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மகேஷ், நடந்த விஷயங்களைச் சொல்லி மனைவி மீது புகார் அளித்திருக்கிறார்.

google news
Continue Reading

india

பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை!. அரசு அதிரடி அறிவிப்பு!..

Published

on

women

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு மாத மாதம் உரிமைத்தொகை கொடுப்போம் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்தது. அதன்பின் அதே வாக்குறுதியை திமுகவும் கொடுத்தது. தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

எனவே, தகுதியான பெண்களுக்கு மாதம் உரிமைத்தொகையாக ரூ.1000 கொடுக்கப்படும் என திமுக அரசு சொன்னது. சொன்னபடியே தற்போது அந்த திட்டம் நடைமுறையிலும் இருக்கிறது. இந்நிலையில், தமிழக அரசை பார்த்து தற்போது அண்டை மாநிலங்களும் இந்த திட்டத்தை முன் வைத்து பிரச்சாரங்கள் செய்தது.

இந்நிலையில், மகாராஷ்டிரா அரசும் பெண்களுக்கு மாதா மாதம் நிதியுதவி அளிக்கப்படும் என கூறியிருக்கிறது. 21 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500 உதவித்தொகையாக கொடுக்கப்படும் என அந்த மாநில அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது.

அந்த மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில்தான் நிதியமைச்சர் அஜித் பவார் 2024-25 நிதியாண்டுக்காண பட்ஜெட்டில் இதை அறிவித்திருக்கிறார். மேலும், 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு வருடத்திற்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக கொடுக்கப்படும் எனவும் மின்சார கட்டன்ணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகளின் மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார். அதோடு, அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு 50 சதவீத கட்டணம் சலுகை எனவும் அஜித் பவார் அறிவித்திருக்கிறார்.

google news
Continue Reading

latest news

இந்தியாவில் 80 சதவீத கணக்கு வாத்தியார்களுக்கு இது தெரியவே தெரியாதாம்… வெளியான ஷாக் தகவல்!..

Published

on

By

பொதுவாக மாணவ, மாணவிகளுக்கு ரொம்பவே கஷ்டமான பாடம் என்றால் கணிதம் தான். ஆனால் அந்த கணித ஆசிரியர்களே சொதப்பி இருக்கும் விஷயம் வெளியாகி இருக்கிறது. 80 சதவீத ஆசிரியர்களுக்கு அடிப்படை கேள்விகளுக்கு பதில் தெரியாது என்ற ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியாவில் இருக்கும் 1300க்கு மேற்பட்ட கணித ஆசிரியர்களிடம் ஆய்வு நடத்தியது. அது தொடர்ந்து அந்நிறுவனம் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இருக்கும் 80 சதவீத கணித ஆசிரியர்களுக்கு இயற்கணிதம் தொடர்பான கேள்விகளுக்கு கூட பதில் தெரியவில்லையாம். பெரும்பாலும் நான்காம் வகுப்பு கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியர்கள் பதில் அளித்துள்ளனர். ஆனால் ஏழாம் வகுப்புகளின் கேள்விகளுக்கு 36.7 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பதிலளித்தனர்.

ஜியோமெட்ரி குறித்த கேள்விகளின் அடிப்படைக்கு கூட 32.9 சதவீத ஆசிரியர்கள் தவறாக பதில் அளித்து இருக்கின்றனர். தசம எண்கள் குறித்த கேள்விகளை கூட சரியாக பதில் கொடுக்க முடியாமல் பல ஆசிரியர்கள் திணறி இருக்கின்றனர். இதுகுறித்த அறிக்கை தற்போது பெற்றோர் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.

google news
Continue Reading

latest news

மகனை சுற்றி வளைத்த நாய்கள்… ஒரு நொடியில் தந்தை செய்த செயல்… வைரலாகும் வீடியோ…

Published

on

By

தெருநாய்கள் கணிக்க முடியாத அளவில் சில நேரங்களில் அதிர்ச்சி கொடுக்கும். சிலரை கடித்து குதறி பதற வைக்கும். இதில் நிறைய குழந்தைகள் சமீபகாலமாகவே நாய் கடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அப்படி நடக்க இருந்த ஒரு சம்பவத்தினை சில நொடிகளில் மாற்றி இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

கோயமுத்தூர் வெள்ளலூர் மகாபலிபுரத்தினை சேர்ந்த ஒருவர். தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் வந்து வீட்டில் நிறுத்துகிறார். தன்னுடைய மகனை கீழே இறக்கிவிட்டு வீட்டுக்குள் சென்று விடுகிறார். அங்கு நின்று இருந்த மகனை 4 தெருநாய்கள் சுற்றி வளைத்தது.

சின்ன பையனும் கொஞ்சமும் பதறாமல் அருகில் இருந்த கல்லை எடுத்து தூக்கி எறிகிறார். ஆனாலும் நாய்கள் அசராமல் அவரை சுற்றி வளைத்தது. பையனும் பயத்தில் கதற தொடங்கிவிடுகிறார். சத்தம் கேட்டு வெளியில் வந்த தந்தை யோசிக்காமல் துரிதமாக செயல்பட்டு மகனை நாய்களிடம் இருந்து மீட்டார்.

சிசிடிவியில் பதிவான அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மாநகராட்சிகள் தெருநாய்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தற்போது கோரிக்கை தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.

இதையும் படிங்க: ரெண்டு கேக், 4 கிளாஸ் ஃப்ரூட் ஜூஸ் ரூ.1.22 லட்சமா?…. டேட்டிங் மோசடியால் மிரண்ட இளைஞர்!

 

அந்த வீடியோவைக் காண: https://x.com/rajtweets10/status/1806959346787443019

 

google news
Continue Reading

india

ரெண்டு கேக், 4 கிளாஸ் ஃப்ரூட் ஜூஸ் ரூ.1.22 லட்சமா?…. டேட்டிங் மோசடியால் மிரண்ட இளைஞர்!

Published

on

By

ஆன்லைன் டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்த பெண்ணை சந்திக்கச் சென்ற டெல்லி இளைஞர் ஒருவர் மோசடியால் ரூ.1.21 லட்சத்தை இழந்த சம்பவம் நடந்திருக்கிறது.

யுபிஎஸ்இ தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்கிற துடிப்போடு டெல்லியில் படித்து வருபவர் அந்த இளைஞர். டேட்டிங்கில் ஆர்வம் கொண்ட அவர் டிண்டர் செயலியில் வர்ஷா என்கிற இளம்பெண்ணைப் பார்த்திருக்கிறார். சில மாதங்களாக இருவரும் பேசிக்கொண்ட நிலையில், கடந்த 23-ம் தேதி அந்தப் பெண்ணின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக டெல்லியின் விகாஸ் மார்க் பகுதியில் உள்ள பிளாக் மிரர் கஃபேவில் சந்தித்திருக்கிறார்கள்.

கஃபேவில் கேக் வெட்டி கொண்டாடிய பிறகு அந்தப் பெண் பழரசம் ஆர்டர் செய்து குடித்திருக்கிறார். சிறிதுநேரத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு திடீரென உடல்நிலை மோசமானதாகச் சொல்லிவிட்டு இடத்தை காலி செய்திருக்கிறார். அந்தப் பெண் சென்ற சிறிது நேரத்திலேயே கஃபே சார்பில் அவருக்கு ரூ.1,21,917.70 பில் கொடுத்திருக்கிறார்கள். என்னடா இது நாம் சாப்பிட்ட கேக்குக்கும் பழரசத்துக்கும் அதிகபட்சம் சில ஆயிரங்கள்தானே ஆகும் என்று அவர் அதிர்ச்சியான நிலையில், மிரட்டி அவரிடம் இருந்து பணத்தைப் பறித்திருக்கிறார்கள்.

பணத்தைக் கொடுத்துவிட்டு அவசரமாக வெளியேறிய அவர் நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்திருக்கிறார். போலீஸ் அந்த கஃபே உரிமையாளரான அக்‌ஷய் பாவாவை கைது செய்து விசாரித்ததில் இந்த கும்பலின் மோசடி அம்பலமானது. டெல்லி சுற்றுவட்டாரத்தில் டேட்டிங்கில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களைக் குறிவைத்து அஃப்சன் பிரவீன் என்பவர் பெண்களின் பெயரில் வலைவீசி பேசுவதும், பின்னர் நேரில் சந்திக்கவும் தூண்டுவாராம்.

நேரில் சந்திக்க வரும் நபரை சந்திக்க வேறொரு பெண்ணை அனுப்புவார்களாம். இதேபோல், அவசரம் என்று சொல்லி பாதியிலேயே அந்தப் பெண் நழுவிவிட குறிப்பிட்ட நபரிடம் மிரட்டி பணம் பறிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பறிக்கப்படும் மொத்தப் பணத்தில் அந்தப் பெண்ணுக்கு 15%, அஃப்சன் உள்ளிட்ட கஃபேவில் பணியாற்றும் நபர்களுக்கு 45% மற்றும் கஃபே உரிமையாளருக்கு 40% என பகிர்ந்துகொண்டதும் தெரியவந்திருக்கிறது.

google news
Continue Reading

Trending