latest news
தீராத பிரச்சனை… பெரிய தலைவலியா இருக்கா..? திருச்செந்தூர் போய் முருகரை இப்படி வழிபடுங்க..!
‘தமிழ்க்கடவுள்’ என்று அழைக்கப்படுபவர் முருகப்பெருமான். இவரை பல கோடி பக்தர்கள் தங்கள் இஷ்ட தெய்வமாக வழிபடுகின்றனர். முருகப்பெருமானின அறுபடை வீடுகளில் எல்லாம் வருடம் முழுவதும் விழாக்கோலமாகத் தான் இருக்கும்.
பால்காவடி, பன்னீர காவடி, புஷ்பகாவடி, பறவை காவடி, அலகு குத்துதல் என பக்தர்களின் பரவசத்தைக் காண கண்கோடி வேண்டும். அந்த வகையில் முருகப்பெருமானின் சுலோகங்கள் மற்றும் துதிப்பாடல்கள், மந்திரங்கள் சொல்லச் சொல்ல நம் கவலைகள் விலகி ஓடும்.
முருகப்பெருமானைப் பொருத்தவரை இந்த தரிசனம் செய்தால் நம் பிரச்சனைகள் எத்தகையதாக இருந்தாலும் தீர்ந்து விடும். பக்தர்களை சோதிப்பார். ஆனால் பரிதவிக்க விடமாட்டார்.
அது என்ன தரிசனம் என்றால் அதிகாலையில் எழும் விஸ்வரூப தரிசனம் தான். அதாவது இரவில் அவருக்கு பள்ளியறை பூஜை நடக்கும். அப்போது என்ன அலங்காரத்தில் இருந்தாரோ அதே அலங்காரம் தான் அதிகாலை விஸ்வரூப தரிசனத்திலும் இருக்கும்.
அதனால் முருகப்பெருமானை அப்போது வழிபடும் பக்தர்களுக்கு முருகப்பெருமான் ‘கவலைப்படாதே பக்தா. உனக்கு நான் இருக்கிறேன்.உன் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைக்கிறேன்’ என சொல்வது போன்ற ஒரு தைரியத்தைத் தருவார்.
அறுபடைவீடுகள் எல்லாவற்றிலும் இது நடக்கும். அங்கு போக முடியாதவர்கள் உங்கள் ஊர் அருகில் முருகர் கோவில் இருந்தாலும் போய் இந்த அதிகாலை தரிசனத்தைப் பார்த்து வழிபடலாம். தேவர்களைக் காக்க சூரபத்மனுக்கே பாடம் புகட்ட முருகர் எடுத்தது தான் விஸ்வரூப தரிசனம்.
முருகப்பெருமானை வழிபடச் செல்லும்போது கோவில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். வரிசையில் ரொம்ப நேரம் நிற்க வேண்டி உள்ளதே என எரிச்சல்படக்கூடாது. அந்த வேளையில் ‘ஓம் முருகா’, ‘ஓம் சரவணபவ’ ஆகிய மந்திரங்களைச் சொல்லி முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொள்ள வேண்டும். அதுவே உங்கள் மனபாரத்தை மேலும் குறைத்து நிறைவான தரிசனத்திற்கு வழிவகுக்கும்.