latest news
சொல்லி கேட்க போறது இல்ல… ஹெல்மெட் போடாதவர்களுக்கு ஸ்கெட்ச் போட்ட தூத்துக்குடி காவலர்கள்…
சாலையில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதி. இருந்தும் சிலர் அதை சரியாக பின்பற்றாமல் தான் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர். அப்படி வண்டி ஓட்டும் சிலருக்கு நூதன முயற்சியை தூத்துக்குடியை சேர்ந்த காவலர்கள்.
தூத்துக்குடி சாலையில் ஹெல்மெட் போடாமல் சென்ற வாகன ஓட்டிகளை காவலர்கள் மடக்கினர். ஆஹா அபராதம் ஆயிரங்களில் கட்ட வேண்டுமோ என கவலையில் அவர்கள் இருக்க காவலர்கள் புதிய ஹெல்மெட்டை கையில் கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கின்றனர். சரி அப்போ ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு என்ற கேள்வி வந்தது.
அப்படி சரியாக ஹெல்மெட் அணிந்து வாகனத்தினை ஓட்டிவந்தவர்களுக்கு வெகுமதியாக ஸ்வீட்டும் கொடுத்து இருக்கிறார்கள். இது காவேரி மருத்துவமனையுடன் தூத்துக்குடி மாவட்டப் போக்குவரத்துக் காவல்துறை இணைந்து தலைகவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியாம். தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் நடந்தது.
தூத்துக்குடியில் கடந்த வருடம் மட்டும் 365 சாலை விபத்துகள் நடந்து இருக்கிறதாம். இந்த விபத்துக்கள் ஹெல்மெட் போட்டு வண்டியை இயக்குவதால் குறையும் என்பதால் போலீசார்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்து இருக்கின்றனர். ஹெல்மெட் போட்டவர்கள் ஸ்வீட் மற்றும் போடாதவர்களுக்கு ஹெல்மெட் என அந்த இடமே ஆச்சரியமாக காணப்பட்டது.