tamilnadu
கள்ளக்குறிச்சியில் 4 பேர் மரணத்துக்கு என்ன காரணம்…. கலெக்டர் விளக்கம்
கள்ளக்குறிச்சியில் மூன்று பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஷெகாவத் விளக்கமளித்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், பிரவீன் மற்றும் சேகர் ஆகியோர் மரணமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர்களின் குடும்பத்தினர், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதை குடித்ததாலேயே அவர்கள் உயிரிழந்ததாகவும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர்.
இதுவே கடைசியாக இருக்கட்டும். இந்த விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டனர். போலீஸுக்கு மாமுல் கொடுத்துவிட்டு கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் கள்ளச்சாரய ஊறல் போடுவதுண்டு என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்துவருகிறது.
இந்தநிலையில், கருணாபுரத்தில் நிகழ்ந்த மரணங்கள் கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்தவையே என்று பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஷெகாவத் கள்ளச்சாரய மரணங்கள் என்று தவறான தகவல் பரப்பப்படுவதாகக் கூறியிருக்கிறார். கள்ளச்சாரய மரணங்கள் என்பதை போலீஸும் மருத்துவர்களும் உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.