latest news
அடுத்தடுத்த மக்களுக்கு பீதியை கொடுக்கும் நிகழ்வுகள்… ஊட்டி சுற்றுலா தளத்தில் புலி நடமாட்டம்…
தமிழகத்தில் அடுத்தடுத்து வன விலங்குகள் ஊருக்குள் வந்து உலவும் சம்பவம் அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஊட்டியில் மற்றொரு சம்பவமும் தற்போது நடந்து இருக்கிறது.
ஊட்டி அருகில் உள்ள தலைக்குந்தா பகுதியில் பைன் ஃபாரஸ்ட் அமைந்து இருக்கிறது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த பைன் ஃபாரஸ்ட்டை மிஸ் செய்யாமல் ட்ரிப் அடிப்பது வழக்கம். அதுவும் ஜூன் மாதத்தில் ஊட்டியில் அதிக பயணிகள் சுற்றுலாவுக்கு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பைன் ஃபாரஸ்ட்டை சுற்றி புலி ஒன்று நடமாடி வருவதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. அந்த புலியை பகுதியை சேர்ந்த மக்களும், சுற்றுலாவுக்கு வந்த பயணிகளும் நேரடியாகவே கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இத்தகவல் வனத்துறை தரப்புக்கு கூறப்பட அவர்கள் உடனடியாக பைன் ஃபாரஸ்ட்டை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். அங்கிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற்றிவிட்டு அந்த இடத்திற்கு யாரும் வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதை அடுத்து புலி அப்பகுதியில் இருப்பதை வனத்துறையினர் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. புலியின் நடமாட்டத்தை வனத்துறை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் விரைவில் அதை பிடிக்க வழிவகை செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. அதுவரை தலைக்குந்தா உள்ளூர் பகுதி மக்களும் கவனமாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிறக்கும் போதே இவ்வளோ அதிர்ஷ்டமா? பேருந்து நிலையில் பிறந்த பெண் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்…