latest news
20 வருஷமா மாறி மாறி அரசு குடிக்க வைக்கிறது!. விஷச் சாராய விவகாரத்தில் கொந்தளித்த சூர்யா!..
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிலர் கண் பார்வையை இழந்திருக்கிறார்கள். பல பெண்கள் விதவைகளாகி விட்டனர். பல குழந்தைகள் தந்தையை இழந்திருக்கிறார்கள்.
நேற்று காலை முதலே கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக செய்திகள் வெளிவந்தது. முதலில் 3 பேர் மரணம் என துவங்கிய செய்தி, போகப்போக இறப்பு என்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது. நேற்று இரவு பலி எண்ணிக்கை 40ஐ தாண்டியது.
கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக பலரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மக்கள் குடித்த சாராயத்தில் கலக்கப்பட்டிருந்த மெத்தனால் விஷமாக மாறியதே பலரின் உயிர் போனதற்கு காரணம் என்பது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்தது. இதையடுத்து, அரசு தரப்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், கடந்த 20 வருடங்களாக ஆளும் அரசுகள் டாஸ்மாக் என்கிற பெயரில் மக்களை குடிக்க வைத்து பாழாக்கி வைத்திருக்கிறார்கள் என பதிவிட்டிருக்கிறார்.