Connect with us

Cricket

மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு.. மௌனம் களைத்த பாக். கிரிக்கெட் வாரியம்

Published

on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மிக மோசமான தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. கடந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான், இந்த முறை லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது அந்நாட்டு ரசிகர்கள், முன்னாள் வீரர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியது.

தோல்வியை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பாகிஸ்தான் வீரர்கள் பற்றிய சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஹாரிஸ் ரௌஃப் பொது வெளியில் ரசிகரை தாக்க முற்பட்டது, பாபர் அசாமுக்கு விலை உயர்ந்த கார் பரிசளிக்கப்பட்டது என அந்நாட்டு வீரர்கள் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.

அந்த வரிசையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு விலை உயர்ந்த கார் பரிசளிக்கப்பட்டதற்கு அந்நாட்டு மூத்த செய்தியாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டு மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. உலகக் கோப்பை தொடரில் மோசமான தோல்வியை தொடர்ந்து அந்நாட்டு வீரர்கள் மீது மேட்ச் பிக்சிங் புகார் தெரிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது.

தற்போது இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்த தகவல்களை அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

பாகிஸ்தானை சேர்ந்த செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவல்களில், “நேர்மாறான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதை நாங்கள் அறிவோம். போட்டிக்கு உட்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்க முடியும், அவற்றுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. எனினும், ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளான, மேட்ச் பிக்சிங் தொடர்பான கருத்துக்களை எந்த வித சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.”

“பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இந்த விவகாரத்தில் எந்த சந்தேகமும் இல்லை, பிறகு ஏன் நாங்கள் விசாரணை நடத்த வேண்டும்? குற்றச்சாட்டு தெரிவித்தவர்கள் ஆதாரத்தை வழங்கியே தீர வேண்டும். குற்றம்சாட்டியவர்களுக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி ஆதாரத்தை சமர்பிக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. ஒருவேளை ஆதாரம் வழங்காத பட்சத்தில், நாங்கள் இழப்பீடு கேட்போம். இதுகுறித்த பஞ்சாப் சட்ட விதிகளில் இந்த விவகாரத்தில் ஆறு மாதங்களுக்குள் முடிவு எட்டப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *