Connect with us

Cricket

உலகக் கோப்பை தொடருக்கு போனீங்களா, இன்ப சுற்றுலா போனீங்களா? அடுத்த சர்ச்சையில் பாகிஸ்தான் அணி

Published

on

டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது முதல் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. லீக் சுற்றோடு வெளியேறியது, பாக். வீரர் ஹாரிஸ் ரௌஃப் ரசிகரை அடிக்க சென்றது, பாபர் அசாமுக்கு விலை உயர்ந்த கார் பரிசளிக்கப்பட்டது என அந்த அணி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்காக அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அணியுடன், வீரர்களின் குடும்பத்தாருக்கும் தங்கும் விடுதிகளில் கிட்டத்தட்ட 60 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் பாகிஸ்தான் அணியின் வீரர்கள், அணி உதவியாளர் குழு மற்றும் அதிகாரிகள் அடங்கிய 34 பேர் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றனர். இவர்களுடன் அணி வீரர்களின் குடும்பத்தார் மட்டும் 26-இல் இருந்து 28 பேர் வரை அணி வீரர்களுடன் அமெரிக்கா சென்றதாக கூறப்படுகிறது.

குடும்பத்தார் பட்டியலில் வீரர்களின் மனைவி, குழந்தை, பெற்றோர் மற்றும் சகோதரர் என அவரவர் விரும்பிய உறவினர்களை அழைத்து சென்றதாக தெரிகிறது. இவ்வாறு உறவினர்களுடன் அமெரிக்கா சென்ற வீரர்கள் பட்டியலில் பாபர் அசாம், ஹாரிஸ் ரௌஃப், ஷதாப் கான், ஃபகர் ஜமான் மற்றும் முகமது ஆமிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இன்னும் திருமணம் செய்து கொள்ளாத பாபர் அசாம் தனது தாய், தந்தை, சகோதரர்களுடன் ஓட்டலில் தங்கியதாக தெரிகிறது. “வீரர்களுக்கு மட்டுமே அணி சார்பில் கட்டணம் செலுத்தப்படும் நிலையில், வீரர்களின் உறவினர்களுக்கு அவரவர் தனியே கட்டணம் செலுத்த வேண்டும். எனினும், தொடரின் போது குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருப்பது அவர்களின் கவன சிதைவுக்கு காரணமாக அமையும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் வீரர்கள் அமெரிக்காவில் தங்கிய தங்கும் விடுதியில் மட்டும் வீரர்கள், உதவியாளர் குழு மற்றும் அதிகாரிகள், வீரர்களின் குடும்பத்தார் என அனைவருக்கும் சேர்த்தே 60 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு செய்யும் போது, தங்கும் விடுதிகூட உறவினர்கள் அடங்கிய குடும்ப சூழலை உருவாக்கும். தொடரின் போது, வீரர்கள் தினமும் அவரவர் குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டனர் என்று கூறப்படுகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *