Connect with us

latest news

அம்மா உணவகத்தின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!. தமிழக அரசு அறிவிப்பு…

Published

on

amma unavagam

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டதுதான் அம்மா உணவகம். இங்கு ஏழைகள் மிகவும் குறைவான விலையில் உணவு அருந்த முடியும். ஒரு ரூபாய்க்கு இட்லி. 5 ரூபாய்க்கு பொங்கல் என காலை உணவும், மதியம் 5 ரூபாய்க்கு கறிவேப்பிலை மற்றும் தயிர் சாதம் எனவும், இரவு 1.50 ரூபாய்க்கு சப்பாத்தியும் விற்பனை செய்யப்படுகிறது.

பெரும்பாலும் ஆதரவு இல்லாதவர்கள், கூலி வேலை செய்பவர்கள், சென்னை போன்ற பெரு நகரங்களில் கிடைக்கும் வேலையை செய்யும் இளைஞர்கள் என பலரும் இந்த உணவகத்தில் உணவு அருந்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் இருந்த 10 வருடங்களும் அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது.

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபின்னரும் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதோடு, இந்த உணவகத்தில் புதிய வகை உணவுகளை விற்பனை செய்யவும், நலிவடைந்த கட்டிடங்களை புதுப்பிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது அம்மா உணவகத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு தினமும் 300 தினக்கூலியாக கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வு வழங்கி இருக்கிறது சென்னை மாநகராட்சி. அதாவது 300ஆக இருந்த தினக்கூலி பணியாளர்களின் ஊதியத்தை ரூ.25 உயர்த்தி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

google news