tech news
வாட்ஸ்அப், இன்ஸ்டாவில் மெட்டா ஏ.ஐ. அறிமுகம் – என்னென்ன செய்யும் தெரியுமா?
மெட்டா நிறுவனம் இந்தியாவில் தனது மெட்டா ஏ.ஐ. சேவையை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. புதிய ஏ.ஐ. “மெட்டா Llama 3” மூலம் இயங்குகிறது. புதிய மெட்டா ஏ.ஐ. அம்சம் தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
புதிய ஏ.ஐ. அம்சத்தை பயனர்கள் திட்டமிடல், கற்றல், உருவாக்குதல் என பல்வேறு செயல்களில் தங்களுக்கு உதவியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மெட்டா ஏ.ஐ. அம்சங்கள்
வார இறுதி நாட்களில் வெளியே செல்ல திட்டமிடும் போது, வாட்ஸ்அப் க்ரூப் சாட் இல் உள்ள மெட்டா ஏஐ உங்களுக்கு உணவகங்கள் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு தளங்களை பரிந்துரைக்கும்.
மாணவராக இருப்பின் மெட்டா ஏ.ஐ. உங்களது பாடங்களில் இருந்து வினாத்தாள் மாதிரி ஒன்றை உருவாக்கும். உங்களிடம் அவற்றை கேள்விகளாக கேட்கவும் செய்யும்.
பேஸ்புக்கில் ஸ்கிரால் செய்யும் போது மெட்டா ஏஐ நீங்கள் தேர்வு செய்யும் பதிவுகள் குறித்த கூடுதல் விவரங்களை வழங்கும். இதேபோன்று மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளில் இருந்து சர்ச் ரிசல்ட்களை வழங்கும். இதன் மூலம் ஒரே சமயத்தில் ஏராளமான விவரங்களை பெற முடியும்.
மெட்டா ஏஐ இமாஜின் அம்சம்
சாட்களில் இமாஜின் (imagine) வார்த்தையை பயன்படுத்தும் போது உங்களால் மெட்டா ஏஐ மூலம் படங்களை உருவாக்கவும் அதனை பகிரவும் முடியும். இந்த அம்சம் எழுத்துக்களை படங்களாக மாற்றும். இதோடு படங்களை அனிமேட் செய்யவும், அவற்றில் மாற்றங்களையும் செய்ய முடியும்.
மெட்டா ஏஐ அம்சம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களில் வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மெட்டா ஏஐ சேவைகளை ஆங்கில மொழியில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த அம்சத்தை அதற்கான சர்ச் பாரில் இருந்து இயக்க தொடங்கலாம்.