tech news
50MP கேமரா, 80W சார்ஜிங்.. ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் ஒன்பிளஸ் போன் அறிமுகம்
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நார்ட் CE 4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் Full HD+ 1080×2400 பிக்சல் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அட்ரினோ 619 GPU வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP சோனி LYT-600 பிரைமரி கேமரா, OIS, 2MP டெப்த் சென்சார், 16MP செல்பி கேமரா, EIS வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 14 கொண்டிருக்கிறது.
5500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நார்ட் CE 4 லைட் 5ஜி மாடல் 80W சூப்பர்வூக் சார்ஜிங், மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை 5, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.1, USB C வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை விவரங்கள்
ஒன்பிளஸ் நார்ட் CE 4 லைட் 5ஜி மாடலின் 8GB, 128GB மெமரி மாடல் விலை ரூ. 19,999 என்றும் 8GB, 256GB மெமரி மாடல் விலை ரூ. 22,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மெகா புளூ, சூப்பர் சில்வர் மற்றும் அல்ட்ரா ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது.
இதில் சூப்பர் ஆரஞ்சு நிறம் தவிர மற்ற நிறங்களின் விற்பனை அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் ஜூன் 27 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.