latest news
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் எதிரொலி!.. நாகை மாவட்டத்தில் 21 பேர் கைது!..
கடந்த வாரம் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களில் பலரும் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனார்கள். விசாரணையில் ஆந்திராவிலிருந்து கெட்டுப்போன மெத்தனாலை வாங்கி கள்ளசாரயத்தில் கலந்து விற்பனை செய்திருப்பது தெரியவந்த்து. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுவரை கர்ணாபுரம் பகுதியை சேர்ந்த 60 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஒருபக்கம், தமிழகம் முழுவதும் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கல்வராயன் மலையில்தான் அதிக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக செய்திகள் வந்ததால் மலைப்பகுதியிலும் போலீசார் தேடுதல் வேட்டையை துவங்கி இருக்கிறார்கள். சில இடங்களில் பேரல் கணக்கில் சாராயம் பிடிப்பட்டது. அவை கீழே ஊற்றி அழிக்கப்பட்டது.
இந்நிலையில், நாகை மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்தி அதிரடி சோதனையில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1500 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதோடு, 3 பைக்குக்ளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.