Connect with us

latest news

சட்டசபையில் தொடர் அமளி!.. கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்…

Published

on

edappadi

கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாரயம் அருந்தி கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. அதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சொல்லி தமிழக முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த நாள் முதலே அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்புச்சட்டை அணிந்து சட்டசபைக்கு வர துவங்கினார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து தொடர்ந்து சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டு பின் வெளிநடப்பு செய்வதும் தொடர்ந்து வந்தது.

நேற்று சட்டபையில் கூட்டத்தொடர் துவங்கிய போதும் சபைக்கு வந்த அதிமுகவினர் மீண்டும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை கையிலெடுத்து கேள்வி கேட்டனர். ஒரு கட்டத்தில் அமளியிலும் ஈடுபட்டனர். இதனால், அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். எனவே, சட்டசபையை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தால் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அதிமுக உறுப்பினர்களுக்கு ஒருநாள் தடை விதிக்கப்பட்ட்டது.

இந்நிலையில், இன்று அவை துவங்கிய போதும் அதிமுக எம்.ல்.ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எனவே, அவை அலுவல்களை நடத்தவிடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். அதன்பின் சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ‘வீண் விளம்பரம் தேடுவதிலேயே அதிமுக குறியாக உள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மையான அக்கறையுடன் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டசபையில் பேச வாய்ப்பளித்தும் வெளியில் சென்று எதிர்கட்சி தலைவர் பேசியது அவை மாண்புக்கு ஏற்புடையது அல்ல’ என பேசினார்.

google news