Connect with us

latest news

நண்பர்களுக்கு டிரெயின் டிக்கெட் புக் செய்தால் ஜெயில் தண்டனையா? விளக்கம் கொடுத்த ஐஆர்சிடிசி…

Published

on

குடும்ப உறுப்பினர்களை தவிர மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டை புக் செய்து கொடுத்தால் 10 ஆயிரம் அபராதம் இல்லை ஜெயில் தண்டனை என தகவல் பரவிய நிலையில் அதற்கு ஐஆர்சிடிசி விளக்கம் அளித்து இருக்கிறது.

இணையத்தில் உலா வரும் இத்தகவலுக்கு ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து மறுப்பு வெளியாகி இருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு டிக்கெட் புக் செய்வது தடை செய்யப்பட்டு இருப்பதாக பரவும் செய்தி உண்மையில்லை. வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து நண்பர்கள், உறவினர்களுக்கு டிக்கெட் புக் செய்யலாம்.

இணையத்தில் உலா வரும் பதிவில், ஐஆர்சிடிசி கணக்கில் இருந்து குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும். மற்றவர்களுக்கு டிக்கெட் பதிவு செய்து கொடுத்தால் 10 ஆயிரம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டு கிடைக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது.

இதை தொடர்ந்து ஐஆர்சிடிசி இதற்கு மறுப்பு தெரிவித்து வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ஒரு வாடிக்கையாளர் தங்கள் கணக்கில் இருந்து மாதம் 12 டிக்கெட் யாருக்கு வேண்டுமென்றாலும் பதிவு செய்து கொள்ள முடியும். ஆதார் உள்ளீடு செய்து இருந்தால் மாதம் 24 டிக்கெட் பதிவு செய்ய முடியும். பயணத்தின் போது குறிப்பிட்ட ஆதாரை கொண்டவரும் பயணிக்க வேண்டும்.

தனிப்பட்ட கணக்கில் இருந்து புக் செய்யப்பட்ட டிக்கெட்டை விற்பனை செய்யக்கூடாது. அது சட்டவிரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news