latest news
மது, கஞ்சாவால் ஒவ்வொரு வருடமும் 32 லட்சம் பேர் மரணம்!.. சுகாதார மையம் தகவல்!..
மது, சிகரெட், கஞ்சா போன்ற கெட்டப் பழக்கங்கள் பல வருடங்களாகவே பலருக்கும் இருக்கிறது. துவக்கத்தில் சுவாரஸ்யத்திற்காக பழகும் பழக்கம் நாளடைவில் அதற்கே அடிமையாகி விடும் நிலையும் ஏற்படுகிறது. பல வருடங்களாக இந்த பழக்கத்தை மேற்கொள்ளும்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமாவதும் நடந்து வருகிறது.
இதில், அதிகம் இறந்து போவது ஆண்கள்தான். ஏனெனில், அவர்கள்தான் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், உலகம் முழுவதும் மது மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களால் வருடத்திறு சுமார் 32 லட்சம் பேர் மரணமடைவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதில், மதுவால் மட்டுமே 26 லட்சம் இறக்கிறார்கள் எனவும், போதைப்பொருட்களால் 6 லட்சம் பேர் இறக்கிறார்கள் எனவும் சொல்கிறது அந்த அறிக்கை. உலகம் முழுவதும் மது அருந்துவதால் 20 லட்சம் ஆண்களும், கஞ்சா குடிப்பதால் 4 லட்சம் ஆண்களும் ஒவ்வொரு வருடமும் உயிரை விடுகிறார்கள்.
இதில், குறைவான வருமானம் பெறும் நாடுகளிலும் அதிக மக்கள் மதுவால் உயிரை விடுகின்றனர். அதேநேரம் அதிக வருமானம் பெறும் மக்கள் வசிக்கும் நாடுகளில் மதுவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக இருக்கிறது. 2019ம் வருடம் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில்தான் உலக சுகாதார மையம் இந்த தகவலை தெரிவித்திருக்கிறது.