Connect with us

Cricket

T20 WorldCup: எட்டாவது முறை; இதுதான் முதல் தடவை… ஃபைனல்ஸில் தென்னாப்பிரிக்கா!

Published

on

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக்கோப்பை டி20 அரையிறுதிப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி, 1998-க்குப் பிறகு முதல்முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறது.

டிரினாட்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இரண்டு அணிகளுமே முதலில் பேட் செய்ய விரும்பிய நிலையில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆனால், களத்தில் நடந்ததோ யாரும் எதிர்பார்க்காதவை. ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கவே, பவர்பிளே முடிவதற்குள்ளாகவே ஆப்கானிஸ்தானின் டாப் 5 பேட்டர்களை தென்னாப்பிரிக்க பௌலர்கள் பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பினர்.

யான்சன் 3, ரபாடா, நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்த, லோயர் ஆர்டர் பேட்டர்களை ஸ்பின்னரான ஷம்ஸி வெளியேற்றினார். இதையடுத்து, 11.5 ஓவர்களிலேயே 56 ரன்களுக்கு ஆப்கானிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் 9 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, ஒமர்சாய் எடுத்த 10 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோரே!

1998-க்குப் பிறகு கிட்டத்தட்ட 8வது முறையாக ஐசிசி தொடர்களின் அரையிறுதியில் விளையாடிய தென்னாப்பிரிக்கா, இந்த எளிய டார்கெட்டை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 8.5 ஓவர்களிலேயே எட்டியது. இரண்டாவது ஓவரிலேயே டிகாக்கை இழந்திருந்தாலும் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் மார்க்ரம் ஜோடி வெற்றியை உறுதி செய்தது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவின் மார்கோ யான்சன், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி தொடர்ச்சியாக எட்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இன்று இரவு நடக்கும் இந்தியா – இங்கிலாந்து மேட்சில் வெற்றிபெறும் அணியை வரும் 29-ம் தேதி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா எதிர்க்கொள்கிறது.

இதையும் படிங்க: காதல் விவகாரம்!.. 15 வயது சிறுவனை வெட்டி வீசிய 17 வயது சிறுவன்!.. தஞ்சாவூரில் அதிர்ச்சி…

google news