Connect with us

latest news

மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்!..

Published

on

magalir

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிர் உரிமையாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயரிடப்பட்டது.

2023ம் வருடம் மறைந்த முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி அன்று இந்த திட்டம் முதல்வர் ஸ்டாலினால் துவங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் இதற்காக விண்ணப்பித்தனர்.

அதில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள பேர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. எதிர்கட்சிகள் இதை கடுமையாக விமர்சனம் செய்தன. எனவே, நிராகரிக்கப்பட்டவர்கள் சரியான காரணத்துடன் மீண்டும் விண்ணப்பித்தால் அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்பின் பலரும் விண்ணப்பித்தனர். அதன் காரணமாக மேலும், 11 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக 2024 -25 ஆம் நிதியாண்டுக்காக தமிழக அரசு 13.722 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. எனவே, விண்ணப்பாம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல் முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்த பின் 30 நாட்களுக்குள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம்.

google news