Connect with us

tech news

கண்ணாடி இல்லாமல் 3D-யில் பார்க்கலாம்.. உலகின் முதல் போன் அறிமுகம்

Published

on

ZTE நிறுவனம் கண்ணாடி அணிந்து கொள்ளாமல் 3D-இல் பார்க்கும் வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ZTE வோயேஜ் 3D பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. நுபியா பேட் 3D டேப்லெட்களின் வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் பில்ட்-இன் “மைக்ரான் லெவல்” அதாவது அளவில் மிகவும் சிறிய மல்டி-டைமென்ஷனல் ஐவியர்-ஃபிரீ 3டி சிஸ்டம் மற்றும் ஏ.ஐ. ஐ டிராக்கிங் வசதி உள்ளது. இதை கொண்டு ஸ்மார்ட்போனில் 3D தரவுகளை அதிக துல்லியமாக கண்டுகளிக்க முடியும். இதற்காக ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே விசேஷமாக பொருத்தப்பட்டு இருக்கிறது.

3D அனுபவம் வழங்குவதோடு இந்த ஸ்மார்ட்போனில் ZTE உருவாக்கிய ஏஐ 2D டு 3D ரியல்டைம் கன்வெர்ஷன் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் 2D தரவுகளை ஒரே க்ளிக்-இல் 3D-யில் மாற்றும். இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் உள்ள பிரத்யேக பட்டனை ஒருமுறை க்ளிக் செய்தால் இயங்கும் வகையில் மிகு வீடியோ என்ற செயலி உள்ளது. இத்துடன் பிரத்யேக 3D வியூவிங் ஏரியா வழங்கப்பட்டுள்ளது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் 2408×1080 FHD+ LCD 3D டிஸ்ப்ளே, ஆக்டா கோர் யுனிசாக் T760 பிராசஸர், மாலி G52 GPU, 6GB ரேம், 128GB மெமரி, டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மை ஓஎஸ் 13 வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP இரண்டாவது லென்ஸ் மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ள ZTE வோயேஜ் 3D ஸ்மார்ட்போன் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், USB C, 4500mAh பேட்டரி, 33W சார்ஜிங் வசதி உள்ளது.

ZTE வோயேஜ் 3D ஸ்மார்ட்போன் ஸ்டார் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 1499 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 17,225 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவில் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு குறித்து எந்த தகவலும் இல்லை.

google news