Connect with us

tech news

ஸ்மார்ட்போனிற்கு ரூ. 18,000 தள்ளுபடி அறிவித்த சாம்சங்

Published

on

சாம்சங் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி S சீரிஸ் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் சாம்சங் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி S23 சீரிஸ். இதில் இடம்பெற்று இருக்கும் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போனிற்கு சாம்சங் நிறுவனம் ரூ. 18000 விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.

இந்திய சந்தையில் கேலக்ஸி S23 ஸ்மார்ட்போன் ரூ. 64,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது சாம்சங் இந்தியா வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 46,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது அதன் உண்மை விலையை விட ரூ. 18000 குறைவு ஆகும்.

இதே விலை ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களிலும் பிரதிபலிக்கிறது. சாம்சங் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் கேலக்ஸி S23 வாங்கும் போது சாம்சங் ஆக்சிஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போதோ அல்லது மாத தவணை முறை அல்லது முழு தொகையை கார்டு மூலம் செலுத்தும் போதும் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் கேலக்ஸி S23 மாடல் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் கேலக்ஸி S24 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், கேலக்ஸி S23 மாடலுக்கு இன்றும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி S23 மாடலில் டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 3900mAh பேட்டரி, 25W சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP + 10MP லென்ஸ் மற்றும் 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

google news