latest news
மதுவிலக்க திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்!.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
தமிழ்நாட்டு மட்டுமல்ல. ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மாநிலங்களிலும் மது கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மது தொடர்பான கொள்கைகள் மாறுபடுகிறது .புதுச்சேரியில் மதுக்கடை, கள்ளுக்கடை, சாராயக்கடை என மூன்றுமே செயல்பட அனுமதி உண்டு. அதேபோல், கேரளாவில் மது மற்றும் கள்ளுக்கடைகளுக்கு அனுமதி உண்டு. அதுபோல், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மதுக்கடைகள் தனியார் வசம் இருக்கிறது.
ஆனால், தமிழகத்தில் மதுக்கடைகளை அரசே நடத்துகிறது. வருடத்திற்கு பல ஆயிரம் கோடி வருமானம் அதிலிருந்து வருவதால் அதை தனியாரிடம் கொடுக்க அரசு நினைப்பதே இல்லை. மேலும், தமிழகத்தில் உள்ள மதுபான ஆலைகளில் சிலவற்றிற்கு அரசியல்வாதிகள் முதலாளியாக இருக்கிறார்கள்.
அரசே மதுபானக்கடைகளை நடத்துவதை நாம் தமிழர் போன்ற சில அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பல வருடங்களாகவே எதிர்த்து வருகிறார்கள். ஆனால், அரசு கண்டு கொள்வதில்லை. மேலும், கள்ளு இறக்குவதற்கும் தமிழகத்தில் தடை இருக்கிறது. ஒருபக்கம், மது பழக்கத்திற்கு அடிமையாகி பலரும் இறந்து போகிறார்கள். பல குற்றங்களுக்கு மதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. அதேபோல், கள்ளச்சாராயம் எல்லா இடத்திலும் கிடைக்கிறது. சமீபத்தில் கூட கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது அரசுக்கு பெரும் தலை குனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் சட்டம் திருத்தப்படும் எனவும் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் புதிய சட்டமும் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இதற்காக மது விலக்கு திருத்த சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியிருக்கிறார்.