Connect with us

tech news

இனி வாட்ஸ்அப் இந்த சாதனங்களில் வேலை செய்யாது – வெளியான புது லிஸ்ட்

Published

on

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புது அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இவை பயனர் தகவல் பரிமாற்ற அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளன.

தற்போது உலகின் ஏராளமான சாதனங்களில் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களை கொண்ட சாதனங்கள் அதிகம் எனலாம். அவ்வப்போது புது அம்சங்கள் மூலம் செயலியை அப்டேட் செய்து வரும் நிலையிலும், வாட்ஸ்அப் செயலிக்கான அப்டேட் ஒவ்வொரு ஆண்டும் பழைய சாதனங்களில் நிறுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் செயலி மொத்தம் 35 மொபைல் போன்களில் வேலை செய்யாது என கூறப்படுகிறது. இந்த பட்டியலில் சாம்சங், மோட்டோரோலா, ஹூவாய், சோனி, எல்.ஜி. மற்றும் ஆப்பிள் என முன்னணி நிறுவனங்களின் மொபைல் போன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் உள்ள மாடல்கள் பெரும்பாலும் மிகவும் பழைமை வாய்ந்தது ஆகும்.

இவற்றில் உள்ள ஹார்டுவேர் காரணமாக சாதனங்களை அப்டேட் செய்ய முடியாமல், பயனர்கள் அதில் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம். தற்போதைய அறிவிப்பின் படி ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கும் பிறகு வெளியான ஆண்ட்ராய்டு ஓ.எஸ். மற்றும் ஐ.ஓ.எஸ். 12 அல்லது அதற்கு பிறகு வெளியான ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் மட்டும் வாட்ஸ்அப் பயன்படுத்த மெட்டா நிறுவனம் பரிந்துரைக்கிறது.

வாட்ஸ்அப் சப்போர்ட் நிறுத்தப்படும் சாதனங்கள் பட்டியல்:

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏஸ் பிளஸ், கேலக்ஸி கோர், கேலக்ஸி எக்ஸ்பிரஸ் 2, கேலக்ஸி கிராண்ட், கேலக்ஸி நோட் 3 N9005 LTE, கேலக்ஸி நோட் 3 LTE+, கேலக்ஸி S 19500, கேலக்ஸி S3 மினி VE, கேலக்ஸி S4 ஆக்டிவ், கேலக்ஸி S4 மினி 19190, கேலக்ஸி S4 மினி 19192 டூயோஸ், கேலக்ஸி S4 மினி 19195 LTE, கேலக்ஸி S4 ஜூம்.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி மற்றும் மோட்டோ எக்ஸ் மாடல்கள். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5, ஐபோன் 5C, ஐபோன் 6, ஐபோன் 6S பிளஸ், ஐபோன் 6S, ஐபோன் SE மாடல்கள்.

google news