Connect with us

tech news

பழைய விலையில் ஜியோ அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா – இப்படி செய்தால் அதிகம் சேமிக்கலாம்

Published

on

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் ரீசார்ஜ்களின் கட்டணத்தை உயர்த்துவதாக சமீபத்தில் அறிவித்தது. விலை உயர்வு தொடர்பான அறிக்கையில், ஜியோ வழங்கும் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா பலன்கள் 2GB டேட்டா வழங்கும் ரீசார்ஜ்களில் மட்டும் தான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா பெறுவதற்கான விலை அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. எனினும், விலை உயர்வு ஜூலை 3 ஆம் தேதியில் இருந்துதான் அமலுக்கு வருகிறது. அந்த வகையில், ஜூலை 3 ஆம் தேதிக்குள் ஜியோ ரீசார்ஜ்களை அதன் பழைய விலையிலேயே பெற முடியும்.

விலை உயர்வு காரணமாக நீங்கள் ஏற்கனவே மேற்கொண்டுள்ள ரீசார்ஜின் வேலிடிட்டி ஜூலை 3 ஆம் தேதியோடு நிறைவு பெறாது. ஜூலை 3 ஆம் தேதிக்கு பிறகும் சேவைகள் அதன் பழைய நிலையிலேயே சீராக இயங்கும். ஜூலை 3 ஆம் தேதிக்கு பிறகு ரீசார்ஜ் செய்யும் போதுதான் உங்களுக்கான விலை உயர்வு அமலுக்கு வரும்.

அந்த வகையில் ஜியோ அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா சேவையில் பயன்பெற விரும்புவோர் ஏற்கனவே உள்ள ரீசார்ஜ் உடன் மற்றொரு ரீசார்ஜ்-ஐ பழைய விலையிலேயே மேற்கொள்ள முடியும். ஜூலை 3 ஆம் தேதிக்குள் பயனர்கள் ஜியோ ரீசார்ஜ் சலுகைகளை அதன் பழைய விலையிலேயே செய்து கொள்ளளாம்.

அந்த வகையில், பயனர்கள் 2 வருடாந்திர ரீசார்ஜ்களை ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் 5ஜி சலுகையை பெற முடியும். ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களும் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இதில் ஏர்டெல் நிறுவன விலை உயர்வு ஜூலை 3 ஆம் தேதியும், வோடபோன் ஐடியா விலை உயர்வு ஜூலை 4 ஆம் தேதியும் அமலுக்கு வர இருக்கிறது.

google news