latest news
இந்தியாவில் 80 சதவீத கணக்கு வாத்தியார்களுக்கு இது தெரியவே தெரியாதாம்… வெளியான ஷாக் தகவல்!..
பொதுவாக மாணவ, மாணவிகளுக்கு ரொம்பவே கஷ்டமான பாடம் என்றால் கணிதம் தான். ஆனால் அந்த கணித ஆசிரியர்களே சொதப்பி இருக்கும் விஷயம் வெளியாகி இருக்கிறது. 80 சதவீத ஆசிரியர்களுக்கு அடிப்படை கேள்விகளுக்கு பதில் தெரியாது என்ற ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியாவில் இருக்கும் 1300க்கு மேற்பட்ட கணித ஆசிரியர்களிடம் ஆய்வு நடத்தியது. அது தொடர்ந்து அந்நிறுவனம் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் 80 சதவீத கணித ஆசிரியர்களுக்கு இயற்கணிதம் தொடர்பான கேள்விகளுக்கு கூட பதில் தெரியவில்லையாம். பெரும்பாலும் நான்காம் வகுப்பு கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியர்கள் பதில் அளித்துள்ளனர். ஆனால் ஏழாம் வகுப்புகளின் கேள்விகளுக்கு 36.7 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பதிலளித்தனர்.
ஜியோமெட்ரி குறித்த கேள்விகளின் அடிப்படைக்கு கூட 32.9 சதவீத ஆசிரியர்கள் தவறாக பதில் அளித்து இருக்கின்றனர். தசம எண்கள் குறித்த கேள்விகளை கூட சரியாக பதில் கொடுக்க முடியாமல் பல ஆசிரியர்கள் திணறி இருக்கின்றனர். இதுகுறித்த அறிக்கை தற்போது பெற்றோர் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.