latest news
முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டது மாநில கல்வி கொள்கை… இதற்கெல்லாம் இனி தடா தான்!…
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்த தமிழக அரசு 2022ம் ஆண்டு தமிழகத்துக்கென தனியாக கல்வி கொள்கையை உருவாக்க இருப்பதாக அறிவித்தது. அதன்படி, நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.
இரண்டு ஆண்டு கடுமையான ஆராய்ச்சி பலதரப்பட்ட கருத்து கேட்புகளுக்கு பின்னர் தமிழகத்துக்கென புதிய கல்வி கொள்கையை அக்குழு இன்று முதல்வர் முக ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளனர். தமிழில் 600 பக்கங்களும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களும் அவ்வறிக்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில், 3,5,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைக்க கூடாது. 12ம் வகுப்பு மதிப்பெண்களுடன் கல்லூரி படிப்பை தேர்வு செய்யும் போது 11 ம் வகுப்பு மதிப்பெண்ணையும் கணக்கில் எடுக்க வேண்டும். நீட் தேர்வு இருக்க கூடாது. இரு மொழி கொள்கையே தொடர வேண்டும். 5 வயது நிரம்பினால் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கலாம்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் தொடர வேண்டும். எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளுக்கு பாடம் இருக்க கூடாது. விளையாட்டே போதுமானது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அறிக்கையில் இடம்பெற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்குள் மீண்டும் தினேஷ் கார்த்திக்… வெளியான ஆச்சரிய அறிவிப்பு..