latest news
மாணவர்களுக்கான கல்வி விசா!.. கட்டணத்தை இரு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலிய அரசு
இந்தியாவில் படிக்க விரும்பாத அல்லது வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் பலர் அமெரிக்கா, லண்டன், கனடா, ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க விரும்புகிறார்கள். இதுவரை லட்சக்கணக்கான மாணவர்கள் அப்படி படித்துவிட்டு இந்தியா திரும்பி இருக்கிறார்கள்.
அதில் பலரும் வெளிநாடுகளியே கூட வேலை கிடைத்து அங்கேயே செட்டில் ஆகி இருக்கிறார்கள். பெரும்பாலும், ரஷ்யாவில் மருத்து படிப்பை படிப்பவர்கள் மிகவும் அதிகம். அதேபோல், ஆஸ்திரேலிய நாட்டுக்கும் இந்தியாவில் இருந்து பல மாணவர்கள் செல்கிறார்கள். இந்நிலையில், மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலிய அரசி இரண்டு மடங்காக உயர்த்தி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இப்போது பிரதமர் ஆண்டனி அல்பனேசி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் கல்வி விசா எடுக்க வேண்டுமெனில் இந்திய மதிப்பில் ரூ.40 ஆயிரம் தேவைப்பட்டது. இப்போது ஆண்டனி அல்பனேசி அரசு 89 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது.
இதன் மூலம் அதிக அளவிலான வெளிநாடு மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவதை தடுக்கமுடியும் என ஆஸ்திரேலிய அரசு நினைக்கிறது. மேலும், பார்வையாளர் மற்றும் தற்காலிக பட்டதாரி விசா வைத்திருப்பவர்கள் ஆன்ஷோரில் மாணவர் விஷா கேட்டு விண்னப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஒருபக்கம், ஆஸ்திரேலியாவில் குடியேறுபவர்கள் 60 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியா உயர்த்தியுள்ள விசா கட்டணம் அமெரிக்கா, கனடா நாட்டை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.