Connect with us

tech news

AI அம்சங்கள், 45W சார்ஜிங்.. ரூ. 8999-க்கு அறிமுகமான புது ஸ்மார்ட்போன்

Published

on

ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய C63 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் புதிய ரியல்மி C63 மாடலில் வீகன் லெதர் டிசைன் மற்றும் AI அம்சங்கள் உள்ளன.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி C63 ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் 90Hz HD+ ஸ்கிரீன், ஆக்டா கோர் யுனிசாக் T612 பிராசஸர், மாலி G57 GPU, 4GB ரேம், 128GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யுஐ 5 ஓ.எஸ். கொண்டிருக்கிறது. இத்துடன் IP54 தர சான்று பெற்ற டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP டூயல் பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் AI சார்ந்து இயங்கும் ஏர் ஜெஸ்ட்யூர் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மினி கேப்ஸ்யூல், 5000mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி C63 ஸ்மார்ட்போன் 4GB ரேம், 128GB மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜூலை 3 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. இதே போன்று தேர்வு செய்யப்பட்ட ரீடெயில் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

புதிய ரியல்மி C63 ஸ்மார்ட்போன் ஜேட் கிரீன் மற்றும் லெதர் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதில் லெதர் புளூ நிற வேரியண்டில் வீகன் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

google news