Connect with us

tech news

ஏராளமான ஃபீச்சர்ஸ்.. வெளியீட்டுக்கு தயாராகும் கேலக்ஸி ரிங்

Published

on

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ரிங் சாதனம் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய கேலக்ஸி ரிங் தோற்றம் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. எனினும், இதில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில், கேலக்ஸி ரிங் மாடலில் வழங்கப்பட இருக்கும் உடல்நலம் சார்ந்த அம்சங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டுள்ள கேலக்ஸி ரிங் APK டியர்டவுனில் இதுபற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

பயனர்கள் கேலக்ஸி ரிங் பயன்படுத்தி அடிப்படை உடல் ஆரோக்கிய அம்சங்களை டிராக் செய்து கொள்ள முடியும். அதன்படி பயனர்கள் தங்களது ஹார்ட் ரேட் மற்றும் ஸ்டிரெஸ் அளவுகளை அறிந்து கொள்ள முடியும். இத்துடன் சருமத்தில் இருந்தே உடலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளும் வசதி கேலக்ஸி ரிங் மாடலில் வழங்கப்படுகிறது.

இத்துடன் பெண்களின் உடல்நிலையை டிராக் செய்யும் வசதிகளும் வழங்கப்படுகிறது. கேலக்ஸி ரிங் பயனர்களின் குரட்டையை கூட டிராக் செய்யும் என்று கூறப்படுகிறது. எனினும், கேலக்ஸி வாட்ச்-இல் உள்ளதை போன்றே இந்த அம்சம் இயங்குவதற்கு போன் அருகாமையில் இருப்பது அவசியம் ஆகும். கேலக்ஸி வாட்ச் பயனரின் குரட்டை ஒலியை பதிவு செய்ய போனின் மைக்ரோபோனை பயன்படுத்தும்.

அந்த வகையில் கேலக்ஸி ரிங் சாதனமும் இதேபோன்ற வழிமுறையை கொண்டு இயங்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி ரிங் சாதனம் ஒன்பது வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவற்றில் 5 முதல் 13 வரை அளவுக்கு ஏற்ற பேட்டரி வழங்கப்படும் என்று தெரிகிறது.

google news