Cricket
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூர்யகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை – உண்மை இதுதான்!
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியின் இக்கட்டான சூழலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் திருப்புமுனையாக அமைந்தது. மேலும், இந்த கேட்ச் போட்டிக்கு பிறகு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. எல்லைக் கோட்டின் அருகே சிக்சராக மாற வேண்டிய பந்தை, சூர்யகுமார் யாதவ் சாதூரியமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.
கேட்ச் பிடித்த போது, எல்லைக் கோட்டின் அருகே சென்ற சூர்யகுமார் யாதவ், பந்தை கேட்ச் பிடித்ததும் அதனை உள்ளே தூக்கிவீசி பவுண்டரை கோட்டை கடந்து வெளியே குதித்தார். மீண்டும் கோட்டை கடந்து உள்ளே வந்த சூர்யகுமார் யாதவ் கேட்ச்-ஐ முடித்து விக்கெட்டை வீழ்த்தினார். இந்த கேட்ச் பிடித்த போது சூர்யகுமார் கால் வைத்த இடத்தின் அருகில் எல்லை கோட்டில் குஷன் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
இதுவே இந்திய வெற்றிக்கு சாதகமாக எல்லைக் கோடு தள்ளி வைக்கப்பட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர். தற்போது இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையிலான தகவல் கிரிக்கெட் வல்லுநர்களிடம் இருந்து வெளியாகி உள்ளது.
அதில், மைதானத்தில் டிவி கமெண்ட்ரி செய்வதற்காக நான் அங்கிருந்தேன். பவுண்டரி அருகே இருந்த வெள்ளை கோடு போட்டி துவங்கியதில் இருந்து அப்படியே இருந்தது. அதனை என்னால் உறுதியாக கூற முடியும். பிட்ச் மாற்றப்படும் போது பவுண்டரியும் மாற்றப்படும். இது வழக்கமான நடைமுறை தான். இவ்வாறு செய்யும் போது எல்லை கோட்டின் அருகில் வெள்ளை நிற கோடு ஏற்படும்.
இதுவே இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்த இடத்திலும் இருந்தது. இதனாலேயே அவர் பிடித்த கேட்ச் சர்ச்சையாக மாறியது. இந்த விவகாரத்தில் மீண்டும் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தாதீர்கள் என்று கூறினர்.