Connect with us

latest news

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் காலை ரொட்டீன் என்ன தெரியுமா? அட செமையா இருக்கே…

Published

on

தற்போதையை இள தலைமுறையினர் வீட்டுக்கு தேவையான பொருட்களை நேரடியாக ஷாப்பிங் செய்வதை விட வீட்டில் இருந்தே அமேசானில் வாங்குவதை தான் விரும்புகின்றனர். அப்படி பெரிய பிரபலத்தினை பெற்று இருக்கிறது அமேசான்.

இத்தகைய அமேசானின் நிறுவனர் தான் ஜெஃப் பெசோஸ். உலகின் பணக்காரர் லிஸ்ட்டில் முக்கிய இடத்தில் இருப்பவர். இப்படி பில்லியனராக இருக்கும் பெசோஸ் வாழ்க்கை எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள் தானே. அப்படி தன்னுடைய காலை வழக்கத்தினை பெசோஸ் ஒரு வீடியோவில் வெளியிட்டு இருக்கிறார்.

காலையில் சின்ன வேலைகளில் கவனம் எடுப்பது தனக்கு ரொம்பவே முக்கியமானது என பெசோஸ் குறிப்பிட்டுள்ளார். காலையில் சீக்கிரமாக எழுவேன். காபி குடிப்பது பிடிக்கும். என்னுடைய பிள்ளைகளுடன் காலை உணவை உண்பேன். அதனால் தான் என்னுடைய காலை மீட்டிங்கை 10 மணிக்கே வைத்துக்கொள்வேன். மிக முக்கியமான மீட்டிங்கை காலையில் இருந்து மதியத்துக்குள் முடித்துக்கொள்வேன்.

அதற்கு பின்னால் என்னால் பெரிய விஷயங்களை அன்றைக்கு யோசிக்கவே முடியாது. அதுமட்டுமல்லாமல் 8 மணி நேர தூக்கம் ரொம்பவே முக்கியம். அது என் மூளைக்கு புத்துணர்வை கொடுக்கும். எனர்ஜியையும் அதிகம் கொடுக்கும். தரமான முடிவுகளை சின்ன எண்ணிக்கையில் எடுத்தாலே போதும். ஒரு நாளைக்கு ஆயிரம் முடிவுகளை எடுப்பதை விட அது சிறந்தது. 

இதையும் படிங்க: டெஸ்லா ஸ்கிரீனில் உள்ள பிழையை சுட்டிக்காட்டிய சிறுமி… எலான் மஸ்க் சொன்ன பதில் என்ன தெரியுமா…?

google news