Connect with us

Cricket

மலையாளி இருந்தா தான் ஐசிசி உலக கோப்பை கிடைக்குமா? இது என்னங்கப்பா புது லாஜிக்கா இருக்கு…

Published

on

11 வருட ஏக்கத்தினை போக்கும் பொருட்டு இந்தியா டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் ஆக மாறி இருக்கிறது. ஆனால் இந்த உலக கோப்பைக்கும் மற்ற கோப்பைகள் இந்தியாவுக்கு கிடைத்ததற்கும் ஒரு ஆச்சரிய தகவலும் தற்போது கசிந்துள்ளது.

17 வருடங்களுக்கு பின்னர் இந்தியாவின் முதல் டி20 உலக கோப்பை, 13 வருடங்களுக்கு பிறகு முதல் உலக கோப்பை சாம்பியன்ஷிப். தென்னாப்பிரிக்காவினை வீழ்த்தி வெற்றி காண்பதற்கு முன்னர் இந்தியாவிற்கு நிறைய ஏமாற்ற தருணங்கள் நடந்து இருக்கிறது.

2023ம் ஆண்டின் ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி, 2021 மற்றும் 2023ம் ஆண்டில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தோல்வி, 2014 டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் தோல்வி,  2017ம் ஆண்டின் சாம்பியன்ஸ் டிராப்பி இறுதி போட்டியில் தோல்வி உள்ளிட்ட பல மிகப்பெரிய தோல்வி இந்திய அணிக்கு கிடைத்தது.

டி20 உலக கோப்பையில் தோல்வியே சந்திக்காமல் கப்பை வென்ற முதல் அணியாக மாறி இருக்கிறது இந்தியா. இது உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றாலும் சில ஆச்சரிய விஷயங்களும் இந்த வெற்றிக்கு பின்னால் இருக்கிறது. அதாவது இந்தியா இதுவரை வென்ற எல்லா உலக கோப்பை டீமிலும் ஒரு கேரள வீரர் இருக்க வேண்டும்.

1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கப்பை வென்ற போது சுனில் வால்சன். இடது கை வேகப்பந்து வீச்சாளரான சுனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. வேக பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் இந்திய அணியின் இரண்டு வெற்றிகளான 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பைகளிலும் இருந்தார். 

2024 உலக கோப்பை டீமில் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் இருந்தாலும் அவரும் சுனில் மாதிரி ஒரு போட்டியில் கூட களமிறங்கவே இல்லை. இதை தவிர்த்து உலக கோப்பை தோல்வி கண்ட எந்த டீமில் மலையாளி ஒருவர் கூட இல்லை. இதனாலே இந்த கருத்து தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் ரூ.1000 லஞ்சம்… வருவாய் ஆய்வாளரை தொக்காக தூக்கிய காவல்துறை…

google news