Connect with us

tech news

பாரபட்சம் இருக்காது.. ஒரே பிராசஸருடன் வெளியாகும் ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள்.?

Published

on

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஐபோன்கள் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வந்துள்ளன. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் டிசைன், அம்சங்கள் என ஏராளமான விவரங்கள் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளன.

அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் அனைத்திலும் ஆப்பிள் A18 சிப்செட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பேக்-என்ட் விவரங்களில் இருந்து இது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

பேக்-என்ட் கோட்களில் புதிய ஐபோனின் சிப்செட் ஐபோன் 17.1, ஐபோன் 17.2, ஐபோன் 17.3, ஐபோன் 17.4 மற்றும் ஐபோன் 17.5 உள்ளிட்ட மாடல்களில் ஒரே சிப்செட் வழங்குவதை குறிப்பதாக தெரிகிறது. இதேபோன்ற பெயர் வைக்கும் முறையை ஆப்பிள் தனது ஐபோன் 15 சீரிசிலும் பயன்படுத்தி இருந்தது.

அதன்படி ஐபோன் 15 மாடலின் பெயர் ஐபோன் 15.4 என்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்-இன் பெயர் ஐபோன் 16.2 என்றும் வைக்கப்பட்டது. புதிய ஐபோன்களிலும் இதேபோன்ற பெயர் வைக்கப்பட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது. அதன்படி புதிய மாடல்கள் அனைத்திலும் ஒரே சிப்செட் வழங்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

ஒரே மாதிரியான சிப்செட் வழங்கப்பட்டாலும், புதிய ஐபோன்களை வித்தியாசப்படுத்தும் அம்சம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் அல்லது ஐபோன் 16 ஸ்லிம் மாடல்களில் A18 சிப் வழங்கப்படலாம்.

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலில் சக்திவாய்ந்த A18 ப்ரோ சிப் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. எனினும், புதிய ஐபோன்கள் பற்றி ஆப்பிள் வழக்கம்போல அமைதியாகவே இருந்து வருகிறது.

google news